3 நாள் லீவ் இருக்கு... தமிழ்நாட்டின் இந்த 6 கோயில்கள்... கிருஷ்ண ஜெயந்திக்கு குடும்பத்துடன் செல்லலாம்!
கிருஷ்ண ஜெம்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்றழைக்கப்படும் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை வரும் ஆக. 26ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்று தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. இந்துக் கடவுளான பெருமாளின் எட்டாவது அவதாரமாக கருதப்படும் கிருஷ்ணர் பிறப்பைக் கொண்டாடும் வகையில் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில், ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், கிருஷ்ண ஜெயந்தி அன்று தமிழ்நாட்டில் இருக்கும் இந்த பிரபலமான கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அந்த கோயில்கள் குறித்து இங்கு காணலாம்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள பார்த்தசாரதி கோயிலிலும் கிருஷ்ண ஜெயந்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். சென்னையில் கிருஷ்ண பகவானுக்கு இருக்கும் பழமையான கோவில்களில் இதுவும் ஒன்று. இந்த கோயிலுக்கு பழம் வரலாறுகள் பல உண்டு. கோயிலின் கட்டடக்கலையும், சிற்பக்கலையும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்திக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த கோலியில் கிருஷ்ண பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இந்த கோயிலின் கட்டடக்கலையின் அழகு கூடுதல் சிறப்பாகும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோதண்டராமர் கோயிலிலும் கிருஷ்ண ஜெயந்திக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த கோயிலில் பெருமாளின் அவதாரங்களில் ஒன்றான பகவான் ராமர் மற்றும் அவரது மனைவி சீதா தேவியை (ஜானகி) வழிபாடு செய்யலாம்.
மதுரையில் அமைந்துள்ள கூடல் அழகர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்திக்கு சிறப்பு வழிபாடுகள் இருக்கும். விஷ்ணு பகவானுக்கு இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
சென்னை நங்கநல்லூரில் உள்ள லஷ்மி நரம்சிம்ம நவநீதிகிருஷ்ணன் கோவில் மிகவும் பிரபலம் வாய்ந்ததாகும். பகவான் நரசிம்மர், கிருஷ்ண பகவான், விஷ்ணு பகவான் ஆகியோருக்கு இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
சென்னை சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள இஸ்கான் அமைப்பின் ஸ்ரீ ராதா கிருஷ்ண கோயிலும் கிருஷ்ண ஜெயந்திக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கும். இதுமட்டுமின்றி திருச்சி ஸ்ரீரங்கம், மதுரை, வேலூர், திருநெல்வேலி, சேலம், கோவை ஆகிய நகரங்களிலும் இஸ்கான் அமைப்பின் கோயில்கள் உள்ளன, இங்கும் கிருஷ்ண ஜெயந்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.