இரத்தத்தில் சேரும் நச்சுக்களை நீக்கும்... சூப்பர் டீடாக்ஸ் பானங்கள்
டீடாக்ஸ் பானங்கள்: உடலில் இரத்த ஓட்டம் குறைவதற்கு முக்கிய காரணம் இரத்தத்தில் சேரும் அழுக்குகள் மற்றும் நச்சுக்கள். உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜனை வழங்கும் இரத்தம் அசுத்தமாக இருந்தால், உடல் உறுப்புகள் தங்கள் வேலையைச் சரியாக செய்ய முடியாமல் போகும். இரத்தம் அசுத்தமாக இருந்தால், இதய தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. சில பானங்களை அருந்துவதன் மூலம் ரத்தத்தைச் செலவில்லாமல் சுத்தப்படுத்தலாம்.
நெல்லிக்காய் ஜூஸ்: வைட்டமின் சி நிறைந்த ஆம்லா என்னும் நெல்லிக்காய் உடலின் இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது. காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் அருந்துவது நல்ல பலன் தரும்.
ஆலுவேரா ஜூஸ்: ஆலுவேராவில் நச்சுக்களை நீக்கும் பண்புகள் காணப்படுகின்றன. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. வெறும் வயிற்றில் ஒரு கப் கற்றாழை சாறு குடிப்பதால், இரத்தம் சுத்தமாகும்.
மஞ்சள் மற்றும் இஞ்சி டீ: இஞ்சி உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு உடலில் சேரும் நச்சுகளை அகற்ற உதவுகிறது. மஞ்சள் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும் என்பதோடு இதில் குர்குமின் உள்ளது. இது இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு, உடலில் உள்ள வீக்கத்தையும் நீக்குகிறது. இதனுடன் சிறிது தேன் சேர்த்தும் குடிக்கலாம்.
துளசி சாறு: ஆயுர்வேதத்தில் துளசிக்கு மிக முக்கிய இடம் உள்ளது, உடலில் இருந்து நச்சுகளை அகற்றும் ஆற்றல் கொண்ட துளசி இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளன. 10 முதல் 12 புதிய துளசி இலைகளை அரைத்து வடிகட்டி தயாரிக்கப்படும் துளசி சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்.
மாதுளை ஜூஸ்: பீட்ரூட்டில் உள்ள நிறமி, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, ஜீமோகுளோபின் அளவை அதிகரித்து, இரத்தத்தை சுத்தம் செய்து, உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
வேப்பம் சாறு: பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் வேப்பிலையில் காணப்படுகின்றன. இது இரத்தத்தை சுத்தம் செய்து, உடலில் சேரும் நச்சுப் பொருட்களை நீக்குகிறது. இரத்தத்தில் தேங்கியுள்ள அசுத்தங்களை அகற்றுவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இளம் தளிர் வேப்ப இலைகளை கழுவி அரைத்து, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வடிகட்டி, இந்த சாற்றை வெறும் வயிற்றில் குடிக்கவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.