சனி, சூரியன் சேர்க்கையால் நவபஞ்ச யோகம்... தீபாவளி நேரத்தில் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்
ஜோதிட சாஸ்திரப்படி, ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தனது ராசியை மாற்றிக் கொள்கிறது. இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும். ராசி மாற்றம் சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். சமீபத்தில் கிரகங்களின் ராஜாவான சூரியன் அக்டோபர் 17ம் தேதி காலை 7.27 மணிக்கு துலாம் ராசியில் பிரவேசித்துள்ளார்.
ஜோதிட சாஸ்திரப்படி, ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தனது ராசியை மாற்றிக் கொள்கிறது. இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும். ராசி மாற்றம் சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். சமீபத்தில் கிரகங்களின் ராஜாவான சூரியன் அக்டோபர் 17ம் தேதி காலை 7.27 மணிக்கு துலாம் ராசியில் பிரவேசித்துள்ளார்.
ரிஷபம் : பணிபுரியும் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வும் கூடும். பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். முதலீடு செய்வதற்கும் நல்ல நேரம். பணிபுரிபவர்கள் புதிய பொறுப்புகளைப் பெறலாம், அதை நீங்கள் சிறப்பாகச் செய்ய முடியும். உங்கள் பணியில் மேலதிகாரி மகிழ்ச்சி அடைவார். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
துலாம் : துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலையில் வெற்றி கிடைக்கும். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் புதிய திட்டம் மற்றும் ஒப்பந்தத்தைப் பெறலாம். எந்த ஒரு நோய் வந்தாலும் அது நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.
மேஷம் : மேஷ ராசிக்காரர்கள் நவபஞ்சம் யோகத்தால் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நீங்கள் உங்களின் கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். அதில் லாபமும் நன்றாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகி பொருளாதார நிலை மேம்படும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தீபாவளி நெருங்கும் நேரத்தில் இந்த நவபஞ்சம் யோகம் உருவாகியிருக்கிறது. இதனால் மேஷம், துலாம், ரிஷபம் ராசிக்காரர்கள் இதுவரை அனுபவித்து வந்த பிரச்சனைகளில் இருந்து முழுமையாக நிவாரணம் பெறப்போகிறார்கள். அவர்களின் வாழ்க்கை முன்பு இருந்ததை விட ஒருபடி முன்னேற்றத்தை காணப்போகிறது. இந்த நேரத்தில் சிந்தித்து செயல்பட்டால் எல்லா முயற்சிகளும் இரட்டிப்பு பலன்களை கொடுக்கும்.
நீதியின் கடவுள் சனி என்பதால் தப்பி தவறி கூட ஏதேனும் ஒரு தவறை தெரியாமல் கூட செய்துவிடாதீர்கள். உங்களின் மகிழ்ச்சி அப்படியே சோகமாக்கூட மாறிவிடும். ஏனென்றால் தவறுக்கு தண்டிப்பவர் சனி பகவான். அவரை குளிர்விக்க வேண்டும் என்றால் நீங்கள் நேர்மையான வழியில் மட்டுமே பயணிக்க வேண்டும். ஒருவரை ஏமாற்றி நீங்கள் அதிக லாபத்தை பெற நினைத்தால், அந்த வெற்றி சிறிது நாட்களிலேயே பெரிய நஷ்டத்தைக் கொண்டு வந்துவிடும்.
அதனால், நல்ல நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம். தொழில், குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கை, பொருளாதாரம் என எல்லாம் இனி உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கப்போகிறது. இதுவரை உங்களை பின்நோக்கி இழுத்த விஷயங்கள் எல்லாம் இனி உங்களை விட்டு விலகிவிடும். இஷ்ட தெய்வ வழிபாடு செய்வதுடன் சனி, குரு பகவானுக்கு உகந்த நாட்களில் சிறப்பு தரிசனம் செய்வது உங்களின் நல்வாழ்க்கைக்கு சிறப்பு சேர்க்கும்.
குடும்பத்தோடு சனி மற்றும் குரு பகவான் கோவில்களுக்கு சென்று வாருங்கள். ஏழைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். ஒரு வேட்டி சேலை வாங்கி கொடுப்பது கூட தானம் தான். அதனால் உங்களால் என்ன முடியுமோ அந்த அளவுக்கு தானம் தருமம் செய்யுங்கள். புன்னிய நதியில் நீராடி மகிழுங்கள். வாழ்க்கை இனி சிறப்பாக இருக்கும்.