நீரஜ் சோப்ரா விளையாடும் போட்டி எப்போது? இந்தியர்களின் கடைசி நம்பிக்கை - இன்றைய அட்டவணை
நீரஜ் சோப்ரா மட்டுமின்றி இன்று இந்திய வீரர்கள் பங்கேற்கும் பல போட்டிகள் நடைபெற இருக்கின்றன. அவற்றின் அட்டவணையை முதலில் பார்ப்போம்.
கோல்ஃப் (Golf): மகளிர் தனிநபர் ஸ்ட்ரோக்பிளேவின் இரண்டாம் சுற்றில் இந்திய வீராங்கனைகள் அதிதி அசோக் மற்றும் திக்ஷா தாகர் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்கும்.
தடகளம் (Athletics): மகளிருக்கான 100 மீட்டர் தடை ஓட்டம் ரெபெசேஜ் சுற்றில் (Heat) ஜோதி யார்ராஜி போட்டியிடுகிறார். இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 2.05 மணிக்கு தொடங்கும்.
மல்யுத்தம் (Wrestling) - ஆடவர்: ஃப்ரீஸ்டைல் 57 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் அமன் செஹ்ராவத் விளையாடுகிறார். இந்த போட்டி இந்திய நேரப்படி 2.30 மணிக்கு தொடங்கும். அமன் செஹ்ராவத் முதல் சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதிபெறும்பட்சத்தில் அந்த போட்டி மாலை 4.20 மணிக்கு நடைபெறும். மேலும், காலிறுதியிலும் அமன் செஹ்ராவத் வென்றுவிட்டால் அரையிறுதிப் போட்டி இன்று இரவு 9.45 மணிக்கு நடைபெறும்.
மல்யுத்தம் (Wrestling) - மகளிர்: 57 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் போட்டியிடுகிறார். இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்கும். முதல் சுற்றில் வென்று காலிறுதிக்கு அன்ஷூ மாலிக் தகுதிபெற்றால், அந்த போட்டி மாலை 4.20 மணிக்கு நடைபெறும். காலிறுதியிலும் அன்ஷூ மாலிக் வென்றுவிட்டால் அரையிறுதிப் போட்டி இரவு 10.25 மணிக்கு நடைபெறும்.
ஹாக்கி (Hockey): வெண்கலப் பதக்கத்திற்கான இன்றைய போட்டியில் இந்திய அணி, ஸ்பெயன் அணி உடன் மோதுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும்.
தடகளம் (Athletics): ஆடவர் ஈட்டி எறிதலின் இறுதிப்போட்டியில் இந்திய வீரரும், கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா போட்டியிடுகிறார். இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 11.55 மணிக்கு தொடங்கும். இதில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் அனைத்தையும் நீங்கள் ஜியோ சினிமா ஓடிடி செயலியில் இலவசமாக நேரலையில் பார்க்கலாம். மொபைல், லேப்டாப் மட்டுமின்றி உங்களின் ஸ்மார்ட் டிவியிலும் இதனை நீங்கள் கண்டுகளிக்கலாம். மேலும் இந்தியாவில் நீங்கள் தொலைக்காட்சியில் Sports 18 சேனலில் நேரலையாக பார்க்கலாம்.