இனி ஆதார் ஈஸியாக வாங்க முடியாது, பாஸ்போர்ட் போல் வெரிபிகேஷன்..!
கேரளாவில் 18 வயது நிரம்பியவர்களின் ஆதார் பதிவு மாவட்ட மற்றும் தொகுதி அளவிலான அக்ஷயகேந்திரா மையங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போலி ஆதாரை தடுக்கும் நோக்கில் முக்கியமான சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முன்னதாக உத்தரபிரதேசத்திலும் இத்தகைய சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டன.
இப்போது இந்த செயல்முறை கேரளாவிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் வெரிபிகேஷன் போல் விண்ணப்பதாரரை நேரில் சந்தித்து அதிகாரி திருப்தி அடைந்தால் மட்டுமே ஆதார் வழங்கப்படும்.
புதிய ஆதார் அட்டை விண்ணப்பித்தவர்கள் குறித்து வெரிபிகேஷன் செய்ய கிராம அலுவலர் விசாரணைக்கு நேரில் செல்வார்.
இதற்கு விண்ணப்பதாரர்கள் தனி கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் கிராம அலுவலருக்கு பதிலாக அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் செயலாளர்கள் ஆய்வுக்கு வருவார்கள்.
புதிய ஆதாருக்கு விண்ணப்பித்த பிறகு, மாநில அரசின் உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்குமாறு அறிவுறுத்தப்படும். பின்னர், ஆவணங்களுடன் உள்ளாட்சி பகுதிகளுக்கு விசாரணை நடத்தியபிறகு ஆதார் அட்டை வழங்கப்படும்.