தெறிக்கும் புது லுக்கில் Apache RTR 160... சென்னையில் என்ன விலை தெரியுமா?

Mon, 11 Dec 2023-9:27 am,

டூயல் சேனல் ABS, பெரிய பின்புற டிஸ்க், ஸ்மார்ட்போனை பைக்குடன் இணைத்துகொண்டு குரல் உதவி வசதி போன்ற புதிய மாற்றங்கள் இதில் செய்ய்ப்பட்டுள்ளன. 

 

இந்த மாடலில் 160சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்/ஆயில்-கூல்டு எஞ்சின் 17.35 hp மற்றும் 14.73 Nm பீக் டார்க்கை உருவாக்குகிறது. இந்த பைக் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் வருகிறது.

இந்த பைக் பெரிய 240mm பின்புற டிஸ்க்கைக் கொண்டிருக்கும். மேலும், இது Rain, Sport, Urban என்ற மூன்று ரைடிங் மோட்களை கொண்டுள்ளது. இந்த பைக் அதிகபட்சமாக மணிக்கு 114 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது. 

இதில் டிவிஎஸ் நிறுவனத்தின் SmartXonnect அம்சத்துடன் குரல் உதவியும் (Voice Assistance) வருகிறது. இது டர்ன்-பை-டர்ன் வழிகாட்டல், அழைப்பு/எஸ்எம்எஸ் அலெர்ட் போன்ற பல செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. 

Hero Xtreme 160R 4V, Bajaj Pulsar NS160 மற்றும் பல பைக்குகளுக்கு இந்த Apache RTR 160 4V மாடல் போட்டியாக இருக்கும். 

 

கடந்த ஆண்டு இதே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 10,056 யூனிட் பைக்குகளுடன் ஒப்பிடுகையில், டிவிஎஸ் நிறுவனம் இம்முறை 16,782 யூனிட் பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

Apache RTR 160 4V மாடல் பைக் சென்னையில் ஷோரூம் கட்டணங்கள் இன்றி (Ex-Showroom) ரூ.1.35 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link