OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பரான புதுப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

Thu, 30 May 2024-9:31 am,

வைட்ரோஸ்-டெண்ட்கொட்டா

ராஜசேகர் இயக்கத்தில் உருவான படம், வைட் ரோஸ். இதில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தை, டெண்ட்கொட்டா தளத்தில் தமிழில் காணலாம். 

வல்லவன் வகுத்ததடா-ஆஹா

பணத்தேவை இருக்கும் 5 முக்கிய கதாப்பாத்திரங்களின் கைகளில் திடீரென்று பணம் கிடைத்தால் எப்படியிருக்கும் என்பதுதான் இப்படத்தின் கதை. இந்த திரைப்படத்தை ஆஹா ஓடிடி தளத்தில் காணலாம். 

அண்டர் தி ப்ரிட்ஜ்: ஹாட்ஸ்டார்

ஆங்கிலத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம், Under The Bridge. இப்படம், டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியிருக்கிறது. 

Seven Orifices - Netflix:

ஜப்பானிய மொழியில் உருவாகியிருக்கும் தொடர், செவன் ஓரிஃபிஸஸ். இந்த தொடரை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம். 

 

ரத்னம் - ப்ரைம்:

விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், ரத்னம். இந்த படத்தை ஹரி இயக்கியிருந்தார். இப்படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் காணலாம். 

மைதான் - ப்ரைம்:

அஜய் தேவ்கன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம், மைதான். இந்த படம், அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியிருக்கிறது. 

தி கார்டாஷியன்ஸ்:

ஆங்கிலத்தில் மிகவும் பிரபலமான ரியல் லைஃப் டாக்குமெண்டரி தொடர், தி கார்டாஷியன்ஸ். இந்த தொடரின் 5ஆம் பாகம் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியிருக்கிறது. 

க்ரூ :

தபு, கரீனா கபூர், க்ரித்தி சனோன் உள்ளிட்டோரின் நடிப்பில் இந்தியில் உருவாகியிருக்கும் படம், Crew. இந்த படம், நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link