புதிய ரேஷன் கார்டு : இனி சீக்கிரம் கிடைக்கும்... தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட் நியூஸ்..!
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து நீண்ட நாட்களாக காத்திருந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு குட் நியூஸ் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. விரைவில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு பெறுவது இப்போது மிக கடினமாகிவிட்டது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்கள் அரசு மீது கடும் அதிருப்தியில் இருந்தனர்.
ஆன்லைன் ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் கண்டு கொள்ளப்படாமலேயே இருந்தது. இது தொடர்பாக புகார்கள் அதிகரித்து வந்த நிலையில், இப்போது தமிழ்நாடு கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுக்க தொடங்கியிருக்கிறது.
உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இது தொடர்பாக உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அதில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ரேஷன் கார்டு விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதி வாய்ந்த விண்ணப்பங்களுக்கு புதிய ரேஷன் கார்டு கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ரேஷன் கடை தொடங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் சக்கரபாணி எடுத்த இந்த நடவடிக்கை புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
அதன்படி உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகளும் ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் மீது பரிசீலனையை தொடங்கியுள்ளனர். விண்ணப்பதாரர்கள் கொடுத்துள்ள ஆவணங்கள் குறித்து கள ஆய்வும் நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
ஒரே வீட்டில் இருந்தபடி ரேஷன் கார்டு அப்ளை செய்தவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறது. அதேபோல் உரிய ஆவணங்கள் கொடுக்காதவர்களின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படுகின்றன.
புத்தாண்டு தொடங்கிவிட்டதால், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே புதிய ரேஷன் கார்டு விநியோகம் தொடர்பான நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளது. இப்போது புதிய ரேஷன் கார்டு பெறாதவர்கள் அடுத்த ஆறு மாதம் வரை காத்திருக்க நேரிடலாம். எனவே, புதிய ரேஷன் கார்டு வேண்டும் என விண்ணப்பிப்பவர்கள் உரிய ஆவணங்கள் கொடுத்து ரேஷன் கார்டுகளை பெற்றுக் கொள்ளுங்கள்.
பூர்த்தி செய்த ரேஷன் கார்டு விண்ணப்பத்தில் அனைத்து தகவல்களும் சரியாக இருக்கிறதா? என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். மேலும், அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கும்போது விண்ணப்பத்தில் இருக்கும் அனைத்து ஆவணங்களின் ஒரிஜினல்களை எடுத்துக் கொண்டு செல்லவும்.
எல்லா தகவல்களும் சரியாக இருந்தால் கூடிய விரைவில் புதிய ரேஷன் கார்டு வீடு தேடி வரும். எனவே ரேஷன் கார்டு வேண்டும் என்பவர்கள் இந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.