அடுத்தடுத்து பட்டியலை அடுக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்.. இதோ லிஸ்ட்
அயலான்: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அயலான். குழந்தைகளை கவர்ந்த இப்படம் பேமிலி ஆடியன்ஸ் மத்தியிலும் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்தது. கிட்டத்தட்ட ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது வரும் 9 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ’எஸ்கே 21’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.
எஸ்கே23: ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் இணைகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இது நடிகர் சிவகார்த்திகேயனின் 23வது படமாக உருவாகிறது.
எஸ்கே24: நடிகர் சிவகார்த்திகேயனின் 24வது படம் குறித்து தகவல் வலம் வருகிறது. அதாவது அவரின் 24வது படத்தை சிபி சக்ரவர்த்தி (Cibi Chakaravarthi) இயக்க பேஷன் ஸ்டுடியோஸ் (Passion Studios) தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
எஸ்கே25: நடிகர் சிவகர்த்திகேயனுடன் இயக்குநர் வெங்கட் பிரபு இணைந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. இது நடிகர் சிவகர்த்திகேயனின் 25வது படமாகும்.