பிப்ரவரி 12ல் ரிசர்வ் வங்கி குழுவை சந்திக்கும் நிர்மலா சீதாராமன்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 12-ம் தேதி ஆர்பிஐ-யின் மத்திய குழுவிடம் உரையாற்ற உள்ளார். அங்கு இடைக்கால பட்ஜெட் குறித்து முன்னிலைப்படுத்த உள்ளார்.
இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆறாவது பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். 2024-25க்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பிறகு, இந்த அரசின் கடைசிக் கூட்டத்தொடர் பிப்ரவரி 9-ம் தேதி நடைபெறுகிறது. இங்கு பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெறும். மத்திய நிதியமைச்சரின் உரைக்கு முன், ஆர்பிஐ வங்கி கடைசி இருமாத நிதிக் கொள்கை மதிப்பாய்வை பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியிடும்.
நாட்டின் முதல் பெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன், கடந்த 2019 முதல் பணியாற்றி வருகிறார். இதுவரை ஐந்து முழு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார்.
இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.