கொல்கத்தா சீன காளி கோயில், பிரசாதமாக நூடுல்ஸ் விநியோகம்..!!
கொல்கத்தாவின் டாங்ரா பகுதியில் உள்ள இந்த கோவில் உள்ள பகுதி சைனா டவுன் என்று புகழ்பெற்றது. இந்த கோவில் உள்ள தெரு திபெத்திய பாணியில் உள்ளது. பழைய கொல்கத்தா மற்றும் கிழக்கு ஆசியாவின் அழகிய கலாச்சாரத்தை நினைவூட்டுகிறது.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த கோவிலில், அன்னைக்கு சீன உணவுகள் படைக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் இங்கு எரியும் தூபக் குச்சிகளும் சீனாவின் தூப குச்சிகள் தான். இந்த வழியில், கோவிலின் காணிக்கைகளைத் தவிர, இங்கே பரவியிருக்கும் நறுமணமும் மற்ற கோவில்களிலிருந்து வேறுபட்டது. தீய சக்திகளைத் தவிர்ப்பதற்காக, கையால் செய்யப்பட்ட காகிதங்கள் எரிக்கப்படுகின்றன.
சீன காளி கோவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சீன மற்றும் மேற்கு வங்க மக்களின் நன்கொடைகளுடன் கட்டப்பட்டது. கோவில் கட்டப்படுவதற்கு முன்பு, இந்த இடத்தில், கடந்த 60 ஆண்டுகளாக, இந்துக்கள் மட்டுமே அன்னையை ஒரு மரத்தடியில் வழிபட்டனர். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சீன சிறுவன் கடுமையாக நோய்வாய்ப்பட்டான் என கூறிய உள்ளூர் மக்கள், அவனை குணமாக்க வேண்டும் என மரத்தின் கீழ் படுக்க வைத்து அன்னையை பிரார்த்தனை செய்தனர் எனக் கூறினர். சிறுவன் அதிசயமாக குணமடைந்த பின்னர், இந்த கோவில் இந்து சமூக நம்பிக்கையையும் சீன சமூக நம்பிக்கையையும் இணைக்கும் மையமாக மாறியுள்ளது.
சீன மக்கள் கோவிலுக்கு வரத் தொடங்கியதும், அவர்கள் தங்கள் கலாச்சாரத்தின் படி காளி தெய்வத்திற்கு உணவுகளை படைக்கத் தொடங்கினர். அப்போதிருந்து, நூடுல்ஸ், சாப்ஸ் போன்றவை இங்கு அன்னைக்கு நைவேத்யம் செய்யப்படுகின்றன.
இந்த கோவிலுக்கு வரும் போது, சீன மக்கள் மற்ற பக்தர்களைப் போல் காலணிகளை கழற்றிவிட்டு உள்ளே வந்து அன்னை தெய்வத்தை வணங்குகிறார்கள். என்றாலும் அவருக்கு வணங்கும் பாணி சீனாவைப் போன்றது.
(குறிப்பு: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ நியூஸ் அதை உறுதிப்படுத்தவில்லை.)