குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்: NPS -இன் கீழ் 50% ஓய்வூதியம், அரசின் பம்பர் பரிசு
பல வித நன்மைகளைக் கொண்டிருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றே அரசு கூறி வருகின்றது. எனினும், மத்திய அரசு ஊழியர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. அவர்களுக்கு அரசு ஒரு நல்ல செய்தியை அளித்துள்ளது.
தற்போது இந்த விவகாரத்தில் மத்திய அரசு தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசு, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்பட்ட தேசிய ஓய்வூதிய அமைப்பில் பெரிய மாற்றங்களைச் செய்யத் தொடங்கியுள்ளது. இந்த மாற்றங்களின் மூலம், பணி ஓய்வுக்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50% ஓய்வூதியத்திற்கான உத்தரவாதம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் பல மாநில அரசுகள் மாநில அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமபடுத்தியுள்ளன. ஹிமாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துயுள்ளன. இதையடுத்து மத்திய அரசு மீதும் அழுத்தம் அதிகரித்து வருகிறது. எனினும், இதுவரை OPS -ஐ முழுமையாக மீண்டும் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு எதுவும் கூறவில்லை. மாறாக, ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அரசு புதிய முயற்சியை எடுத்துள்ளது.
தேசிய ஓய்வூதிய முறையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு நன்மைகளை அளிக்கும் வகையில் பல மாற்றங்களை செய்வதற்காக நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் அறிவித்தார். ஊழியர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் குறைந்தபட்சம் 50% -ஐ பணி ஓய்வு காலத்தில் ஓய்வூதியமாகப் பெறுவதை உறுதிசெய்வது இந்தக் குழுவின் நோக்கமாக இருக்கும்.
NPS -இல் தற்போதுள்ள முறையில், ஊழியர்கள் டெபாசிட் செய்த தொகையின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனால் அதில் நிலையான ஓய்வூதியத் தொகை என்பதில்லை. பல நாடுகளின் ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் ஆந்திரப் பிரதேச அரசு செய்த மாற்றங்கள் குறித்து இந்தக் குழு ஆய்வு செய்துள்ளது.
அரசாங்கம் 40-45% ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் 25-30 ஆண்டுகள் பணிபுரியும் ஊழியர்களுக்கு இது போதுமானதாக இருக்காது. ஆகையால், ஊழியர்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய 50% ஓய்வூதியத்துக்கான உத்தரவாதத்தை அரசாங்கம் இப்போது பரிசீலித்து வருகிறது.
தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ், சிறப்பு சேமிப்புக் கணக்கை உருவாக்குவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் தேவைப்பட்டு, ஆனால் போதுமான பணம் இல்லாத அரசு ஊழியர்களுக்கு இந்தக் கணக்கு பயன்படும். ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கணக்கில் ஓய்வூதியத்துக்குத் தேவையான தொகையை அரசு டெபாசிட் செய்யும். இந்தத் திட்டம் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் ஓய்வூதிய நிதிக்காக உருவாக்கும் சேமிப்புக் கணக்கைப் போலவே இருக்கும்.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஓய்வுபெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களின் NPS கணக்கில் போதுமான தொகை இல்லாவிட்டாலும் ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்வதாகும். ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கம் இந்தக் கணக்கைச் சரிபார்த்து எவ்வளவு பணம் தேவை என்பதை முடிவு செய்யும்.
தேசிய ஓய்வூதிய முறையால் த் திட்டத்தால் எந்தெந்த ஊழியர்கள் பயனடைவார்கள்? 25-30 ஆண்டுகள் அரசுப் பணிகளில் பணிபுரியும் ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) கீழ் பெறும் அதே தொகையை NPS இன் கீழ் பெறுகிறார்கள் என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
25-30 ஆண்டுகள் அரசுப் பணிகளில் பணிபுரியும் ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) கீழ் பெறும் அதே தொகையை NPS இன் கீழ் பெறுகிறார்கள் என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். எனினும், 20 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக பணிபுரிந்த பிறகு NPS ஐ விட்டு வெளியேறிய ஊழியர்கள் குறைவான ஓய்வூதியம் பெறுவதாக புகார் கூறுகின்றனர்.
நீண்ட காலம் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கும் புதிய திட்டம் பயனளிக்கும். இத்திட்டத்தின் மூலம், பணியாளர்கள் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் குறித்து கவலைப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்யும். ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 50% ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட புதிய விருப்பங்களை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இந்த நடவடிக்கை ஊழியர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும், ஏனெனில் இது அவர்களின் ஓய்வூதிய பாதுகாப்பை உறுதி செய்யும்.
பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வர வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. எனினும், NPS -இல் செய்யப்படவுள்ள இந்த மாற்றங்கள் ஊழியர்களுக்கு நிச்சயம் நிவாரணம் அளிக்கும். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறந்த ஓய்வூதிய பலன்கள் மற்றும் எதிர்கால நிதி பாதுகாப்புக்கான உத்தரவாதம் ஆகியவை கிடைக்கும். இந்த மாற்றங்களை அரசாங்கம் எப்போது, எப்படிச் செயல்படுத்துகிறது என்பதை மத்திய அரசு ஊழியர்களும் ஊழியர் சங்கங்களும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
பொறுப்பு துறப்பு: இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. NPS -இல் முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது. NPS குறித்த சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.