மாதா மாதம் 1 லட்சம் ஓய்வூதியம்: அள்ளித்தரும் NPS... இப்படி முதலீடு செய்தால் போதும்
ஓய்வு காலத்தில் மக்கள் நிதி பிரச்சனைகளுக்கு ஆளாகாமல் இருக்க அரசால் தொடங்கப்படட் திட்டம் தான் தேசிய ஓய்வூதியத் திட்டம்.
பணி ஓய்வுக்கு பின்னர் நல்ல தொகையை பெற ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தொகையை முதலீடு செய்தால் போதும்.
இத்திட்டத்தின் கீழ், மாதந்தோறும், 1 லட்சம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெறலாம். இதனால், வயதான காலத்தில் எந்த வித பண போராட்டமும் இல்லாமல் வாழ்க்கை கழியும்.
தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 18 முதல் 70 வயதுக்குட்பட்ட குடிமக்கள் தங்கள் முதலீட்டு கனவை நிறைவேற்றிக்கொள்ள இந்த திட்டத்தில் சேர முடியும்.
அரசாங்கத்தால் நடத்தப்படும் NPS -இல் மக்கள் முதலீடு செய்து நல்ல வருமானம் பெறலாம். தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்து பெரும் வருமானம் ஈட்டும் உங்கள் கனவை நீங்கள் நிறைவேற்றலாம். பாதுகாப்பான ஓய்வு காலத்தை எதிர்பார்க்கும் அனைவருக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பு என்றே கூறலாம்.
என்பிஎஸ் 1 ஜனவரி 2004 அன்று தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் ஒரு தன்னார்வ மற்றும் நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும். இது மட்டுமின்றி, மத்திய அரசின் சமூக பாதுகாப்பு முயற்சியாகவும் இது கருதப்படுகிறது. NRI களும் இதில் முதலீடு செய்யலாம். எதிர்காலத்திற்கான முதலீட்டை பொறுத்தவரை இது ஒரு மிக நல்ல திட்டமாக பார்க்கப்படுகின்றது.
இந்த திட்டத்தில் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் பிரீமியமாக 30 ஆண்டுகளுக்கு செலுத்தினால், மாத ஓய்வூதியமாக (Pension) ரூ.1 லட்சம் கிடைக்கும். ஓய்வு பெறும்போது, நீங்கள் ஒரு கோடி ரூபாயை எளிதாகப் பெறுவீர்கள். இந்தத் திட்டத்தில் ஈக்விட்டி வெளிப்பாடு 50 முதல் 75 சதவிகிதம் ஆகும்.
உதாரணமாக, ஒருவருக்கு தற்போது 30 வயது என்று வைத்துக்கொள்வோம். ஓய்வு பெறும்போது 5 கோடி ரூபாய் கார்பஸ் உருவாக்க விரும்பினால், முதலில் அவர் எவ்வளவு வட்டி பெற முடியும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். NPS இல் சராசரியாக 10 சதவிகித வட்டி எளிதாகக் கிடைக்கும். அவர் ஒவ்வொரு மாதமும் சுமார் 22,150 ரூபாய் என்பிஎஸ்ஸில் முதலீடு செய்தால், 30 ஆண்டுகளில் அவரது பணம் ஆண்டுக்கு 10 சதவீத வட்டி விகிதத்தில் சுமார் 5 கோடி ரூபாயாக மாறும்.