தினம் ஒரு எலுமிச்சை போதும்... நோய்கள் உங்களை அண்டாது!

Fri, 28 Jul 2023-5:43 pm,

எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் எலுமிச்சைக் கனி ஒரு அதிசயக்கனி. கிறது.  சுவையில் புளிப்பான எலுமிச்சை ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய நன்மைகளை அள்ளித் தருகிறது. அதிகம் வேண்டாம், ஒரே ஒரு எலுமிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். இது ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஒரு  பழம் என்றால் மிகையாகாது. 

எலுமிச்சையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம், பாந்தோத்தேனிக் அமிலம், நியாசின், தியாமின் மற்றும் பல வகையான புரதங்கள் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 100 கிராம் எலுமிச்சையில் 34 கலோரி உள்ளது. எலுமிச்சை டையூரிடிக் மற்றும் அதிக வைட்டமின் சி மற்றும் கனிம உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது. 

எலுமிச்சை சாரை குடிப்பது உங்கள் உடலில் கூடுதல் கலோரிகளை எரிப்பதோடு, எடை இழப்பிற்கும் உதவுகிறது. தொப்பை மற்றும் எடையைக் குறைக்க, தினமும் காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து வெறும் வயிற்றில் குடிக்கவும். நீங்கள் விரும்பினால், அதனுடன் ஒரு தேக்கரண்டி தேனையும் சேர்க்கலாம். இது நிச்சயம் பலனளிக்க கூடியது.

நீரிலும், காற்றிலும் ஏற்படும் கதிரியிக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் எலுமிச்சை தோலில் உள்ள ப்யோபிளேன் என்ற சத்தில் உள்ளது. தினமும் எலுமிச்சை உண்பவர்கள் கதிரியக்கத்தைத் தாங்கி தப்ப முடியும். புற்று நோய்களுக்கு தரப்படும் சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத்தைத் தீங்கையும் எலுமிச்சை தடுக்கிறது. மேலும் ஆரம்ப கட்ட புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், காலையில் வெதுவெதுபான நீரில் எலுமிச்சை சாறு கலந்து அருந்துவது சிறந்த பலன் கொடுக்கும்.

ரத்ததில் அதிக சர்க்கரை உள்ளவர்களுக்கு எலுமிச்சைப் பழம் சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. எலுமிச்சை சாறு அருந்துவது சிறந்த பலனை அளிக்கும். எனினும் அதில் சர்க்கரைக்கு பதிலாக சிறீது உப்பு சேர்த்து அருந்துவது நல்லது.

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து காலை உணவுக்கு முன் குடிப்பது கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கிறது. எலுமிச்சை குமட்டல், நெஞ்செரிச்சல், வீக்கம் போன்ற பல செரிமான கோளாறுகளை குறைக்க உதவும்.

 

அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ள எலுமிச்சை, ஆஸ்துமாவை குணப்படுத்தவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது. ஆயுர்வேதத்தில் எலுமிச்சைக்கு  சிறந்த முக்கியத்துவம் உண்டு. 

பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link