Ola எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு ஆரம்பம்; எகிறும் ஆர்டர்கள்
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு தொடங்கியது: Ola Electric தனது முதல் மின்சார ஸ்கூட்டரை இந்தியாவில் முன்பதிவு செய்யத் தொடங்கியது. முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி செய்யப்படும்.
முன்பதிவு கட்டணம் ரூ. 499 ஆகும்: புது ஸ்கூட்டருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 499 ஆகும். இந்த தொகையை வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்சத்தில் முழுமையாக திரும்பப் பெற முடியும்.
பவிஷ் அகர்வால் டெஸ்ட் டிரைவ் செய்தார்: சமீபத்தில், இந்த ஸ்கூட்டர் சோதனையின் போது பல முறை தென்பட்டது. பவிஷ் அகர்வாலும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெஸ்ட் டிரைவ் செய்து இது தொடர்புடைய சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஆண்டுக்கு 1 கோடி ஸ்கூட்டர்களை உருவாக்க இலக்கு: தமிழ்நாட்டில் Futurefactory இல் இந்த ஓலா ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டும். நிறுவனத்தின் இந்த தொழிற்சாலை உலகின் மிகப்பெரிய மின்சார 2 சக்கர வாகனம் ஆகும். இது ஆண்டுக்கு 10 மில்லியன் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. முதல் கட்டமாக, இந்த தொழிற்சாலையில் ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் மின்சார ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்படும்.