Ola Scooter vs Simple One: எந்த ஸ்கூட்டரை வாங்குவது? விலை, அம்சங்களுக்கான முழு ஒப்பீடு இதோ
இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் பல விதங்களில் சிறப்பம்சம் வாய்ந்ததாக இருந்தது. மின்சார வாகன சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓலா மின்சார ஸ்கூட்டரும், சிம்பிள் ஒன் மின்சார ஸ்கூட்டரும் அன்று அறிமுகம் செய்யப்பட்டன. இவை இந்தியாவின் ஆட்டோமொபைல் சூழலில் பல நேர்மறையான மாற்றங்களை அறிமுகம் செய்யும் என நம்பப்படுகின்றது.
ஓலா எலக்ட்ரிக் மின்சார ஸ்கூட்டர்களில், Ola S1 ஸ்கூட்டரின் வரம்பு 121 கி.மீ ஆகவும் Ola S1 Pro-வின் வரம்பு 181 கி.மீ ஆகவும் உள்ளது. Ola S1 பைக்கை முழுவதுமாக சார்ஜ் செய்ய 4.48 மணி நேரமும் Ola S1 Pro-ஐ சார்ஜ் செய்ய 6.5 மணி நேரமும் ஆகும். இருப்பினும், இந்த ஸ்கூட்டர் ஃபாஸ்ட் சார்ஜரின் உதவியால், 18 நிமிட சார்ஜிலேயே 75 கிமீ தூரம் வரை செல்லும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுஹாஸ் ராஜ்குமார், சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 236 கிமீ தூரம் பயணிக்கும் என்று கூறினார். இது இந்தியாவில் மின்சார பைக்குகள் வழங்கும் மிக உயர்ந்த வரம்புகளில் ஒன்றாக இருக்கும்.
ஓலா எலெக்ட்ரிக் பைக் ஒரு அதிரடியான விலையில் அறிமுகப்படுத்ட்டுள்ளன. S1 ஸ்கூட்டரின் விலை ரூ .99,999-லும், S1 Pro-வின் விலை ரூ .1,29,999 லும் தொடங்குகிறது.
சிம்பிள் ஒன் மின்சார பைக் ரூ .1,09,999 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது (எக்ஸ்-ஷோரூம் விலை). இருப்பினும், சிம்பிள் ஒன் பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ .60,000 வரையிலான ஃபேம் 2 (Fame 2) மானியத்தை பெறுவதற்கான தகுதி கிடைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.
181 கிமீ தூரம், 3.0 வினாடிகளில் 0-40 கிமீ வேகம், 115 kmph டாப் ஸ்பீட் ஆகியவற்றுடன் இந்த மின்சார ஸ்கூட்டர் புதிய எல்லைகளைத் தொட்டுள்ளது. இது 3.97 கிலோவாட் பேட்டரி திறன் கொண்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக இருக்கும் மின்சார வாகனத்தின் திறனை விட இது 30% அதிகமாகும். மேலும் 8.5 கிலோவாட் உச்ச சக்தி கொண்ட பிரிவில் இது மிகவும் சக்திவாய்ந்த மோட்டார் ஆகும்.
சிம்பிள் ஒன் பைக் அடையக்கூடிய அதிகபட்ச வேகம் மணிக்கு 105 கிமீ ஆகும். பைக்கில் 4.8kWh பேட்டரி (ஒருங்கிணைந்த நிலையான மற்றும் கையடக்க) மற்றும் 7kW மோட்டார் உள்ளது.