உலகிலேயே மிகப் பழமையான Pyramid ரகசியத்தை சீனா மறைப்பது ஏன்?

Wed, 27 Oct 2021-10:42 pm,

இந்த பிரமிடுகள் சீனாவின் சியான் நகரிலிருந்து 100 கி.மீ தொலைவில் காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. பிரமிட் வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த மர்மம் இன்று வரை வெளிவரவில்லை.

symbolic photo- Courtesy : Pixabay

சீனா பல நூற்றாண்டுகளாக பிரமிடுகளின் ரகசியங்களை மறைத்து வைத்துள்ளது. 1912 ஆம் ஆண்டு, ஃபிரெட் மேயர் ஷ்ரோடர் என்ற அமெரிக்க தொழிலதிபர் அங்கு வந்தபோது தான் இந்த பிரமிடுகள் பற்றிய தகவல்கள் உலகிற்கு கிடைத்தன.

symbolic photo- Courtesy : Pixabay

சீனாவில் 8,000 ஆண்டுகள் பழமையான பிரமிடு உள்ளதாக அமெரிக்க தொழிலதிபர் தனது டைரியில் குறிப்பிட்டுள்ளார். 1000 அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட பிரமிடுகளும் சீனாவில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்குப் பிறகு, அமெரிக்க விமானப்படை விமானி ஜேம்ஸ் கோஸ்மேன் இந்த பிரமிட்டைப் பார்த்தார். இது எகிப்தின் பெரிய பிரமிட்டை விட உயரமானது என்றும், அதன் மேல் படிகம் போன்ற ஒரு கல் இருப்பதாகவும் கூறினார்.

symbolic photo- Courtesy : Pixabay

90 களில் இந்த பிரமிடுகளைக் கண்டுபிடிக்க முயன்றார் ஜேர்மன் புலனாய்வாளர் ஹார்ட்விக் ஹவுஸ்டோர்ஃப். ஆனால் அவருடைய முயற்சிகள் வெற்றிபெறவில்லை. பிரமிடுகளை சீன ராணுவம் பாதுகாப்பதாக தகவல் கிடைத்தது. 8000 ஆண்டுகள் பழமையான இந்த பிரமிடுகளில் மரங்களும் புல்லும் வளர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அரசக் குடும்பத்தினரின் சடலங்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களும் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம். அதனால் தான், இந்த பிரமிடுகளுக்கு உயர் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாம்! 

symbolic photo- Courtesy : Pixabay

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link