Business Idea: ரூ.10,000 இருந்தால் போதும்... வருமானத்திற்கு குறைவே இருக்காது!

Mon, 13 Nov 2023-8:20 pm,

மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் கீழ், அனைத்து வாகனங்களும் மாசு சான்றிதழ் பெற வேண்டியது அவசியமாகும். இல்லை என்றால் அபராதம்வ் இதிக்கப்படும். இதனால் மாசு பரிசோதனை மையத்தின் வணிகத்தின் (Pollution Testing Center) தேவை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. 

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், மாசு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் மாசு சான்றிதழ் (PUC) சான்றிதழ் தேவை. இந்தத் தொழிலை ஆரம்பித்தவுடனே, முதல் நாளிலிருந்தே சம்பாதிக்கத் தொடங்குவீர்கள்.

ஒரு நபர் வாகனம் ஓட்டி, மாசு சான்றிதழ் (PUC) இல்லாமல் இருந்தால், அவருக்கு அபராதம் விதிக்கப்படலாம். இந்த அபராதத் தொகை 10,000 ரூபாய் வரை இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலையில், ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய வாகனங்களும் மாசு சான்றிதழ் பெறுவது அவசியம். மாசு சான்றிதழ் இல்லை என்றால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.

 

நெடுஞ்சாலை-எக்ஸ்பிரஸ் வழிக்கு அருகில் புகை பரிசோதனை மையத்தை தொடங்கலாம். ஆரம்பத்தில் ரூ.10,000 மட்டுமே முதலீடு செய்ய முடியும். ஒவ்வொரு மாதமும் ரூ.50,000 வரை சம்பாதிக்கலாம். நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளின் ஓரத்தில் ஒருவர் நாளொன்றுக்கு ரூ.1500-2000 எளிதாக சம்பாதிக்கலாம்.

புகை பரிசோதனை மையத்தை திறக்க, முதலில் உள்ளூர் போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) உரிமம் பெற வேண்டும். இதற்கு விண்ணப்பிக்கும் போது, ​​10 ரூபாய் பிரமாணப் பத்திரம் அளிக்க வேண்டும். உள்ளாட்சி நிர்வாகத்திடம் No Objection Certificate சான்றிதழைப் பெற வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் மாசு பரிசோதனை மையத்திற்கு வெவ்வேறு கட்டணங்கள் உள்ளன. சில மாநிலங்களில் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

புகை சோதனை பரிசோதனை மையத்தை அடையாளமாக மஞ்சள் நிற கேபினில் திறக்க வேண்டும். அதனால் தனித்தனியாக அடையாளம் காண முடியும். கேபின் அளவு - நீளம் 2.5 மீட்டர், அகலம் 2 மீட்டர், உயரம் 2 மீட்டர். புகை சோதனை மையத்தில் உரிமம் எண்ணை எழுதுவது அவசியம்.

புகை சோதனை மையத்தைத் திறக்க, ஒருவர் மோட்டார் மெக்கானிக்ஸ், ஆட்டோ மெக்கானிக்ஸ், ஸ்கூட்டர் மெக்கானிக்ஸ், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், டீசல் மெக்கானிக்ஸ் அல்லது இன்டஸ்ட்ரியல் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட் (ஐடிஐ) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். நீங்கள் smoke analyzer என்னும் புகை சோதனைக்கான கருவியை வாங்க வேண்டும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link