விற்பனைக்கு வரும் Oppo Reno 12F 5G... இதுல AI Eraser இருக்கு... லீக்கான தகவல்கள் இதோ!

Tue, 18 Jun 2024-1:24 pm,

Oppo Reno 12 5G சீரிஸில், Oppo Reno 12 5G, Oppo Reno 12 Pro 5G, Oppo Reno 12F 5G என மூன்று மாடல்கள் உள்ளன. இவை அனைத்தும் இன்றுதான் சந்தையில் விற்பனைக்கு வருகின்றன.

 

அந்த வகையில், Oppo Reno 12F 5G மொபைல் சிங்கிள் RAM உடன் வருகிறது. அதாவது இது 8ஜிபி RAM + 256ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது என கூறப்படுகிறது. 

 

இந்த 8ஜிபி + 256ஜிபி வேரியண்டின் விலை 329.99 ஐரோப்பிய யூரோ இருக்கலாம் என கூறப்படுகிறது. அதாவது, ரூ.29 ஆயிரத்து 500 ரூபாய் ஆகும். 

 

இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் பார்த்தோமானால், இது பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்தில் இரண்டு வண்ணங்களில் வரலாம். 

இந்த மொபைலில் பின்புற கேமரா மூன்று சென்சார்களுடன் வரும். 50MP+8MP+2MP மூன்று கேமரா இருக்கும் என்றும் முன்புற செல்ஃபி கேமரா  32MP இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Oppo Reno 12F 5G மொபைலில் 6.67 இன்ச் FHD+ AMOLED 2.5D டிஸ்ப்ளே உடன் வரலாம். இதன் ரெப்ரேஷ் ரேட் 120Hz, டச் சாம்பிளிங் ரேட் 240Hz, 600 nits உச்ச பிரைட்னஸ் உடன் வரும் என கூறப்படுகிறது. 

 

Oppo Reno 12F 5G மொபைலில் MediaTek Dimensity 6300 Energy SoC உடன் பிராஸஸர் உடன் வரும் என கூறப்படுகிறது. 5000mAh பேட்டரி உடனும், 45W SuperVOOC சார்ஜிங் உடனும் வரும் என கூறப்படுகிறது.  

 

Oppo Reno 12F 5G AI அம்சங்களுடன் வருகிறது. உதாரணத்திற்கு, AI Eraser மூலம் புகைப்படத்தில் தேவையில்லாதவர்கள், தேவையற்றதை நீக்கலாம். இதுபோன்று நிறைய அம்சங்களுடன் வருகிறது.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link