உங்க 5 வயது குழந்தைக்கு ‘இதெல்லாம்’ கட்டாயம் தெரிஞ்சிருக்கணும்..!!

Fri, 21 Jun 2024-8:27 pm,

குழந்தை வளர்ப்பு: எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. அவை சிறந்த குடிமக்களாக வளர்வது பெற்றோர்கள் கையில் தான் உள்ளது. எனவே, குழந்த பிறந்ததிலிருந்து ஐந்து வயதிற்குள், நீங்கள் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியவற்றை அறிந்து கொள்ளலாம்.

குழந்தை வளர்ப்பு டிப்ஸ்: உங்கள் குழந்தைக்கு 5 வயது ஆன பிறகும் உங்கள் குழந்தை சில விஷயங்களைக் கற்றுக் கொள்ளவில்லை என்றால், பெற்றோராக, குழந்தை வளர்ப்பு விஷயத்தில் நீங்கள் மிகவும் பின்தங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம். அவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். 

நல்ல பழக்கவழக்கங்கள்: நன்றி, தயவு செய்து, என்னை மன்னியுங்கள் போன்ற நல்ல வார்த்தைகள் குழந்தைக்கு 5 வயதாகும் போது கற்பிக்கப்பட வேண்டும். இந்த வார்த்தைகளை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்பதை குழந்தை அறிந்திருக்க வேண்டும். அதனால் அவர்கள் முடிந்தவரை நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மை: குழுக்களாக விளையாடும்போது பரஸ்பரம் விளையாட்ட் பொருட்கள் மற்றும் பொம்மைகளைப் பகிர்ந்து கொள்ளவும், பரஸ்பரம் அக்கறை கொள்ளவும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். இதனால் குழந்தை நல்ல நடத்தையை வளர்த்துக் கொள்கிறது.

சுகாதார பழக்க வழக்கம்: தினமும் குளிப்பது, பல் துலக்குவது, கைகள் அழுக்காக இருக்கும்போது கைகளைக் கழுவுவது போன்ற அடிப்படை சுகாதாரப் பழக்கங்களை உங்கள் குழந்தைக்குக் கற்றுக் கொடுங்கள். மேலும் குழந்தைக்கு 4 வயதாகும்போது, ​​அவருடைய பொம்மைகளை சரியான இடத்தில் வைத்து, வீட்டை சுத்தமாக பராமரிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.

தவறை ஒப்புக் கொள்ளும் தன்மை: குழந்தைப் பருவத்திலிருந்தே தன் தவறை ஒப்புக்கொள்ளவும், யாரேனும் ஒருவரின் மனதை புண்படுத்தும் போது   மன்னிப்பு கேட்கவும், கற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகள் இரண்டு முதல் மூன்று வயதாக இருக்கும்போது, ​​இதனை கற்றுக்கொடுப்பது எளிது. இதன் காரணமாக, குழந்தைகள் வளர்ந்து கண்ணியமானவர்களாக இருப்பார்கள்.

பாதுகாப்பு விதிகள்: அறிமுகமில்லாதவர்களுடன் பேசுவது சரியல்ல என்பதை 5 வயது வரை குழந்தைக்கு கற்பிக்க மறக்காதீர்கள். நெரிசலான இடங்களில் பெற்றோருடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். கூர்மையான பொருள்கள் மற்றும் மின்சார அதிர்ச்சியால் காயமடையும் ஆபத்து பற்றி குழந்தைகளுக்கு சொல்லுங்கள். 

சொல்வதை கேட்கும் வழக்கம்: உங்கள் குழந்தைப் பருவத்திலேயே மற்றவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நாம் ஒரு பொருளை கொடுக்கும் வரை, அடம்பிடிக்காமல் பொறுமையாக இருக்க குழந்தைக்கு கற்றுக்கொடுங்கள்.

உணர்வுகளை வெளிப்படுத்துதல்: 2-3 வயதிலேயே உங்கள் பிள்ளையின் எண்ணங்களை வாய்மொழியாக வெளிப்படுத்த நீங்கள் கற்றுக் கொடுத்தால், விரைவில் குழந்தை அழுவதற்கும் கத்துவதற்கும் பதிலாக வாய்மொழியாக விஷயங்களைச் சொல்லும். பசி, தாகம், வலி ​​அல்லது துன்பம் என எல்லாவற்றையும் மிக எளிதாகப் பகிர்ந்து கொள்ளக் கற்றுக் கொள்வான்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link