இந்த திருமணத்திற்கு இத்தனை கோடி செலவா..! பரினிதி சோப்ராவின் திருமண பட்ஜெட்!

Mon, 25 Sep 2023-1:07 pm,

பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகையாக விளங்கும் பரினிதி சோப்ரா, அரசியல் பிரமுகரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய உறுப்பினருமான ராகவ் சத்தாவை திருமணம் செய்து கொண்டார். 

இவர்களின் திருமணம், உதய்பூரில் உள்ள லீலா பேலஸ் எனும் அரண்மனையில் நடந்துள்ளது.

இவர்கள் திருமணத்திற்கு முன்னர், 90ஸ் தீமில் சங்கீத் நிகழ்ச்சி நடந்தது.  

பரினிதி சோப்ரா-ராகவ் சத்தாவின் திருமணத்தில் 100-200 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த திருமண நிகழ்வில் 5 நாடுகளின் பிரத்யேக உணவுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த திருமணத்தை நடத்த 4-5 கோடி வரை செலவாகியிருக்கலாம் என்றும், மிகவும் ஆடம்பரமாக நடந்த பாலிவுட் திருமணங்களில் இதுவும் ஒன்று என்றும் கூறப்படுகிறது. 

பரினிதி-ராகவ் நிச்சயதார்த்தம் கடந்த மே மாதம் 13ஆம் தேதி நடந்தது. அந்த நிகழ்வில் வெளிநாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியும் இதே அளவு ஆடம்பரமாக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 

பரினிதி சோப்ரா-ராகவ் சத்தா, தங்களது திருமண புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இவை வைரலாகி வருகின்றன. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link