வீட்டில் இருந்தே விண்ணப்பித்தால் 7 நாளில் பாஸ்போர்ட் வீட்டில் டெலிவரி

Fri, 17 Nov 2023-2:14 pm,

வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் அவசியம் ஆகும். இந்தியாவில் பாஸ்போர்ட் பெறும் கடினமான நடைமுறைகள் தற்போது மேலும் எளிதாகிவிட்டன.  

பாஸ்போர்ட் அவசரமாக தேவைப்படும் சந்தர்ப்பங்களில், உடனடியாக கடவுச்சீட்டை பெறும் வழிமுறைகளும் வந்துவிட்டன. ஏழே நாட்களில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி? தெரிந்துக் கொள்ளுங்கள்

பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் உள்நுழைந்து, 'Apply For New Passport' என்ற இணைப்பைக் கிளிக் செய்தபிறகு, உடனடி பயன்முறையை (Immediate Mode) தேர்ந்தெடுக்கவும்   

விண்ணப்பப் படிவத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் ஆன்லைனில் சரியாக நிரப்பவும். முகவரியை சரியாக நிரப்பவும், வீட்டு முகவரியை சரிபார்க்க நேரில் அதிகாரிகள் வருவார்கள்

பதிவேற்றம் முடிந்ததும், பாஸ்போர்ட் சேவா மையத்தில் (PSK) தனிப்பட்ட நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரத்தை பதிவு செய்ய, "Pay and Schedule Appointment" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்

தேர்ந்தெடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சேவா மையத்தில் நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்துவிட்டு, ஆன்லைன் கட்டணப் பக்கத்திற்கு செல்லுங்கள்

கட்டணம் செலுத்தி முடிந்ததும், விண்ணப்பக் குறிப்பு எண் (ARN) அல்லது அப்பாயிண்ட்மென்ட் எண் அடங்கிய விண்ணப்ப ரசீதை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பாஸ்போர்ட் சேவா கேந்திராவுக்குச் செல்லும்போது, உங்களிடம் அனைத்து அசல் ஆவணங்களும் இருப்பது முக்கியம். பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது பூர்த்தி செய்யப்பட்ட முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் பாஸ்போர்ட் அனுப்பப்படும். 

சாதாரண பாஸ்போர்ட்டுக்கான செயலாக்க நேரம் 30 முதல் 45 நாட்கள் ஆகும். தட்கல் முறையில் செய்யப்படும் விண்ணப்பங்கள் 7 முதல் 14 நாட்கள் ஆகும். இந்தியா போஸ்ட்டின் ஸ்பீட் போஸ்ட் போர்ட்டலில் உள்ள கண்காணிப்பு செயலியை பார்த்து டெலிவரி நிலையை நீங்கள் கண்காணிக்கலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link