மார்ச் முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ள 5 முக்கிய விதிகள்!

Wed, 06 Mar 2024-2:35 pm,

Paytm Payments Bank

மார்ச் 15 ஆம் தேதிக்குள் Paytm வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை வேறு வங்கிக்கு மாற்ற வேண்டும் என்று RBI உத்தரவிட்டுள்ளது. இதன் பிறகு Paytm வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யவோ, பரிவர்த்தனைகளைச் செய்யவோ முடியாது.

எஸ்பிஐ கடன்

இந்தியாவின் பாரத ஸ்டேட் வங்கி வரும் மார்ச் 15 முதல், தனது கிரெடிட் கார்டுகளில் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகையை மாற்ற போவதாக அறிவித்துள்ளது. 

FASTag KYC

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் FASTagல் KYC விவரங்களைப் புதுப்பிக்க மார்ச் 2024 வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளது. குறிப்பிட்ட தேதிக்குள் உங்கள் விவரங்களை புதுப்பிக்கப்படாவிட்டால், FASTag கணக்கு செயலிழந்து விடும்.

வரி தவணை

வரி செலுத்துபவர்கள் அனைவரும் தங்கள் வரியின் நான்காவது தவணையை மார்ச் 15 ஆம் தேதிக்குள் கட்டாயம் செலுத்த வேண்டும். முன்கூட்டிய வரி செலுத்தும் காலக்கெடுவைத் தவறவிட்டால், மாதத்திற்கு 1 சதவிகிதம் கூடுதல் வரி செலுத்த நேரிடும்.

ஜிஎஸ்டி விதிமுறைகள்

தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய ஜிஎஸ்டி விதிகளின்படி, ஒரு நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 5 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டினால், அந்த நிறுவனத்தின் அனைத்து பி2பி பரிவர்த்தனைகளுக்கும் இ-இன்வாய்ஸ் கட்டாயம் வேண்டும். இன்வாய்ஸ் இல்லாமல் இ-பில் உருவாக்க முடியாது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link