7th Pay Commission எச்சரிக்கை: இந்த சின்ன தவறால் LTC claim-ஐ பெற முடியாமல் போகலாம்
அரசாங்கத்துடன் பட்டியலிடப்படாத முகவர்களிடமிருந்து உங்கள் டிக்கெட்டுகளை வாங்கியிருந்தால், ஒன்று உங்கள் LTC பில் வாங்கிக்கொள்ளப்படாது, மற்றொன்று பயணச் செலவுகளை நீங்கள் சொந்தமாக ஏற்க வேண்டியிருக்கும். நீங்கள் LTC சலுகைகளைப் பெற விரும்பினால், பணியாளர் துறையின் எச்சரிக்கையை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். டிக்கெட்டுகளை IRCTC, M/s Balmer Lawrie & Company, M/s Ashok travels & Tours ஆகியவற்றிலிருந்து மட்டுமே வாங்க வேண்டும். விமான டிக்கெட்டுகளுக்கு, நீங்கள் அதை சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் வலைத்தளத்திலிருந்தும், அவர்களின் டிக்கெட் விண்டோ மூலமாகவும் புக் செய்யலாம்.
முன்னதாக பிப்ரவரி நடுப்பகுதியில், LTC பண வவுச்சர் திட்டத்தின் பலன்களைப் பெறுவது தொடர்பாக பல அரசு ஊழியர்கள் பல கேள்விகளை எழுப்பியிருந்தனர். அதன் பிறகு, இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்த குழப்பத்தை நீக்க மத்திய அரசு ஒரு விளக்கத்தை வெளியிட்டது. சமீபத்தில், பல அமைச்சகங்கள் மற்றும் துறைகள் கேள்விகளை எழுப்பி, இது தொடர்பான விளக்கங்களை அரசாங்கத்திடம் கேட்டுள்ளன. LTC திட்டத்தைப் பெறுவதற்கு ஏதேனும் முன் அறிவிப்பு தேவையா என்பது அனைவருக்கும் உள்ள ஒரு பெரிய கேள்வியாக உள்ளது.
பிப்ரவரி 16 தேதியிட்ட அறிக்கையில், 2018-21க்கு இடையில் எல்.டி.சி நிலுவையில் இருக்கும் LTC-க்கு பதிலாக இந்த சிறப்பு ரொக்கத் தொகைக்கான அறிவிப்பு செய்யப்பட்டது என்று அரசு கூறியது. இந்த திட்டத்தின் பயனைப் பெறுவதற்கு பில்கள் 2021 மார்ச் 3 ஆம் தேதிக்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. LTC திட்டத்தின் விஷயத்தில் எந்த வித முன் அறிவிப்பும் தேவையில்லை என்றும், 2018-19ஆம் ஆண்டுக்கு (31.12.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது), 2021 மார்ச் 31 க்கு முன் தொகையை கோரலாம் என்றும் மத்திய அரசு மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த திட்டம் 2018-21 கால அளவிற்கான LTC பிளாக் திட்டமாக இருப்பதால், இதற்கு முன்னர், மத்திய அரசு இதற்கான செயல்பாட்டு முறைகளையும் தெளிவுபடுத்தியது. பொதுவாக, ஒரு LTC பிளாக்கில் இரண்டு எல்.டி.சி கட்டணங்கள் அடங்கும் (ஒன்று சொந்த ஊர், மற்றொன்று இந்தியாவில் எங்கும் செல்ல). அரசாங்கத்தின் புதுப்பிப்புகளின்படி, இவற்றில் ஒன்றை எடுத்து மற்றொன்று எடுக்கப்படாமல் இருந்தால், இந்த திட்டத்தை இதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அக்டோபர் 12, 2020 முதல் அமல்படுத்தப்படும் எல்.டி.சி பண வவுச்சர் திட்ட ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பிளாக் ஆண்டில் பயன்படுத்தப்படாத எல்.டி.சி கட்டணத்திற்கு எல்.டி.சி திட்டம் பொருந்தும் என்று அரசாங்கம் கூறியது. இத்திட்டத்தைப் பெறும்போது, பல பில்கள் ஏற்றுக்கொள்ளப்படும். அக்டோபர் 12, 2020 தேதியிட்ட எல்.டி.சி பண வவுச்சர் திட்ட ஆணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து, நடப்பு நிதியாண்டின் இறுதி நாளுக்குள் இந்த செயல்முறை நடந்திருக்க வேண்டும்.