OnePlus 9R 5G: அதிரடி தள்ளுபடியுடன் இந்தியாவில் விற்பனை துவக்கம்: விலை, பிற விவரங்கள் இதோ
ஒன்பிளஸ் இந்த ஸ்மார்ட்போனை OnePlus 9 தொடருடன் கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனிலும் ஒன்பிளஸ் 9 போன்ற அம்சங்களே கிடைக்கின்றன. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போனில் சிறிய மாற்றங்களும் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 870 பிராசசர் மற்றும் 5G இணைப்புடன் கிடைக்கிறது.
OnePlus 9R ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ .39,999 ஆகும். 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் கொண்ட வகைக்கு இந்த விலை நிர்ணயிக்கப்படுள்ளது. 122GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ .43,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கார்பன் பிளாக் மற்றும் லேக் ப்ளூ வண்ணங்களில் கிடைக்கும்.
Amazon.in, OnePlus.in மற்றும் ஒன்ப்ளஸின் ஆஃப்லைன் கடைகளிலிருந்தும் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். SBI கிரெடிட் கார்டு மற்றும் EMI பரிவர்த்தனைகளில் இந்த ஸ்மார்ட்போனில் 2000 ரூபாய் உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், இதில் நோ காஸ்ட் EMI மற்றும் Jio-வின் சலுகைகளும் கிடைக்கின்றன.
OnePlus 9R ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட OxygenOS 11 இல் இயங்குகிறது. தொலைபேசியில் 6.5 இன்ச் Full-HD+ (1,080×2,400 pixels) OLED டிஸ்ப்ளே உள்ளது. இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 870 பிராசசர் இந்த தொலைபேசியில் கிடைக்கிறது. 12GB ரேம் வரையிலான ஆப்ஷன் இதில் கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இதன் பிரதான லென்ஸ் 48MP-ஐக் கொண்டுள்ளது. இது தவிர, தொலைபேசியில் 162MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 5 MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP மோனோக்ரோம் ஷூட்டர் ஆகியவை உள்ளன. முன்பக்கத்தில் 16MP கேமரா உள்ளது. இதில் 256GB வரையிலான ஸ்டோரேஜும் கிடைக்கிறது. இணைப்பிற்கு, இதில் 5G, 4G LTE, வைஃபை 6, புளூடூத் v5.1, GPS/ A-GPS, NFC ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த தொலைபேசி இண்டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சாருடன் வருகிறது. தொலைபேசியில் 4500mAh பேட்டரி உள்ளது. இது 65W சார்ஜிங்கை ஏதுவாக்குகிறது.