விரைவில் வருகிறது 5G: 100% அதிக வேகம் கொண்ட இந்த Superfast Network-ன் நன்மைகள் இதோ
தகவல்களின்படி, 5G நெட்வொர்க் தற்போதைய 4G நெட்வொர்க்கை விட பல மடங்கு வேகமாக இருக்கும். தரவு பரிமாற்றம் 10 மடங்கு முதல் 100 மடங்கு வேகமாக இருக்கும்.
5G நெட்வொர்க் வந்த பிறகு, அனைத்து வீடியோக்களையும் சில நொடிகளில் YouTube அல்லது மற்ற தளங்களில் பதிவேற்றிவிடலாம். இந்த தளங்களில் வீடியோக்களைப் பதிவேற்றுவதற்கு அதிக நேரம் எடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அறிக்கையின்படி, 5G நெட்வொர்க் வந்த பிறகு, உங்கள் வீடியோ அழைப்புகள் இன்னும் சக்திவாய்ந்ததாக இருக்கும். அனைத்து வீடியோ அழைப்புகளிலும் காட்சிகள் மிகத் தெளிவாக இருக்கும்.
5G நெட்வொர்க், PUBG போன்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் கேம்களை விளையாடுபவர்களுக்கு ஒரு வரமாக இருக்கும். 5G நெட்வொர்க்கில் நீங்கள் உயர் வரையறை விளையாட்டுகளை விளையாட முடியும்.
இந்நாட்களில் செல்ஃப் டிரைவிங் கார்கள் பற்றியும் அதிகம் பேசப்படுகின்றன. 5G நெட்வொர்க் செல்ஃப் டிரைவிங் வாகனங்களை இணைப்பில் வைக்கும். இதன் மூலம் சாலை விபத்துக்கள் குறிப்பிடத்தக்க வகையில் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.