Earn from Whatsapp: Affiliate Marketing மூலம் பணம் ஈட்டுவது இவ்வளவு சுலபமா?
Whatsapp மூலம் பணம் ஈட்ட நீங்கள் 3 விஷயங்களை வைத்திருக்க வேண்டும். முதலில், உங்களிடம் கண்டிப்பாக ஒரு ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும். அதில் Whatsapp இயக்கத்தில் இருக்க வேண்டும். நீங்கள் செயலில் உள்ள ஒரு Gmail account-ஐயும் கொண்டிருக்க வேண்டும். இதைத் தவிர உங்களிடம் சரியான இணைய வசதி இருக்க வேண்டும்.
Whatsapp-ன் மூலம் பணம் ஈட்ட, Whatsapp குழுக்களில் இருப்பது லாபகரமானதாக இருக்கும். Whatsapp மூலம் அதிகமாக சம்பாதிக்க பல Whatsapp குழுக்களில் இருப்பது நன்மை பயக்கும். பணம் ஈட்டுவது எப்படி என்பதை அறிந்து கொள்ளலாம்.
Whatsapp-ல் Affiliate Marketing மூலம் பணம் சம்பாதிக்கலாம். இந்த மார்க்கெட்டிங் மூலம், நீங்கள் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் ஆகியவற்றிலிருந்து கணிசமான தொகையை சம்பாதிக்கலாம்.
Affiliate Marketing என்பது வித்தியாசமான மார்கெடிங் முறையாகும். இதில், ஈ-காமர்ஸ் தளத்திலிருந்து ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்து நீங்கள் ஒரு இணைப்பை உருவாக்க வேண்டும். இது ஒரு தனித்துவமான இணைப்பாக இருக்கும். இது உங்கள் ஐடியை அடையாளம் காணும். இந்த இணைப்பு மூலம் விற்கப்படும் அனைத்து தயாரிப்புகளிலும் ஒரு நிலையான கமிஷன் உங்கள் கணக்கில் செல்லும்.
முதலில் நீங்கள் இ-காமர்ஸ் தளத்திலிருந்து ஒரு பிராடெக்டைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அதற்கு ஒரு தனித்துவமான இணைப்பை (Unique Code) உருவாக்க வேண்டும். இப்போது அதை உங்கள் Whatsapp மூலம் மக்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் தனிப்பட்ட தொடர்பு பட்டியலில் சில நபர்களே இருப்பார்கள். ஆனால் நீங்கள் பல Whatsapp குழுக்களில் உறுப்பினராக இருந்தால், ஒரே நேரத்தில் இந்த இணைப்பை அனுப்பி அதிக பணம் ஈட்டலாம்.
அமேசான் போன்ற தளங்கள் உங்களுக்கு Affiliate Marketing-க்கு 10 சதவீத கமிஷனை வழங்குகின்றன. பிற தளங்களிலிருந்தும் நீங்கள் கணிசமான கமிஷனைப் பெறலாம்.