புதிய வடிவில் வரப்போகிறது Facebook: என்னென்ன மாற்றங்கள்? இங்கே காணலாம்!!
பேஸ்புக் கிளாசிக் லுக் விரைவில் முடிவடையப்போகிறது. பேஸ்புக்கின் புதிய இணையதளத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய தோற்றத்தை மக்களுக்கு முன்னால் கொண்டு வருவதில் நிறுவனம் உற்சாகமாக இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. அனைத்து பயனர்களும் புதிய தோற்றத்தை விரும்புவார்கள் என்று நிறுவனம் நம்புகிறது.
Engadget-ன் புதிய அறிக்கையின்படி, ப்ளூ நேவிகேஷனுடனான கிளாசிக் பேஸ்புக் வடிவமைப்பு செப்டம்பர் முதல் டெஸ்க்டாப் பயனர்களுக்கு கிடைக்காது. கடந்த ஆண்டு பேஸ்புக் தனது டெவலப்பர் மாநாட்டில் அறிவித்த வடிவமைப்பு, மே முதல் புதிய டீஃபால்ட் டிசைனாக உள்ளதாக அறிக்கை கூறுகிறது. இருப்பினும், இன்னும் 'கிளாசிக்' வடிவமைப்பிற்கு திரும்புவதற்கான ஆப்ஷன் உள்ளது.
பயனர்களின் அனுபவத்தை சிறந்ததாக்க நிறுவனம் அவ்வப்போது புதிய புதுப்பிப்புகளைக் கொண்டுவருகிறது. இதனுடன், App-ன் ஈடுபாட்டை அதிகரிக்க நிறுவனம் புதிய அம்சங்களைச் சேர்க்கிறது.
பேஸ்புக் தனது டெஸ்க்டாப் தளத்தில் புதிய தோற்றத்தை நீண்ட காலமாக சோதித்து வருகிறது. செப்டம்பர் முதல் பயனர்கள் 'கிளாசிக் பேஸ்புக்கை' access செய்ய முடியாது.
சமூக ஊடக தளமான பேஸ்புக் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது டெஸ்க்டாப் பயனர்களுக்காக ஒரு புதிய பயனர் இடைமுகத்தை உருவாக்கியது. அப்போது பேஸ்புக் பயனர்களுக்கு புதிய விருப்பத்தை தேர்வு செய்யலாம் அல்லது முன்னர் இருந்த இடைமுகத்தை தேர்வு செய்யலாம் என்று ஆப்ஷனை கொடுத்தது. பேஸ்புக் வலைத்தளத்தின் FAQ-பக்கத்தின்படி, இப்போது பேஸ்புக் பழைய பயனர் இடைமுகத்தைத் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷனை அகற்றப் போகிறது. அதற்கு கிளாசிக் பேஸ்புக் என்று பெயரிடப்பட்டுள்ளது. (All Images: Social Media)