FASTag lane-ல் வாகன நெரிசல் பற்றி எளிதாக அறியலாம்: அரசின் hi-tech FASTag திட்டம் இதுதான்
அடுத்த முறை நீங்கள் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது, எந்த டோல் பிளாசாவில் எவ்வளவு போக்குவரத்து நெரிசல் உள்ளது என்பதை நீங்கள் முன்கூட்டியே பார்க்கலாம். அதற்கேற்ப நீங்கள் உங்கள் பாதையையும் மாற்றிக்கொள்ளலாம். இதற்காக, சாலை போக்குவரத்து அமைச்சகம் (Ministry of Road Transport) இன்று நிகழ்நேர ஆன்லைன் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியில், சுங்கச்சாவடிகளில் உங்களுக்கு ஒவ்வொரு நிமிடத்திற்குமான புதுப்பிப்புகளையும் பெறுவீர்கள்.
சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் பாதையில் போக்குவரத்து நெரிசல் திட்டமிடப்பட்ட நேரத்தை தாண்டினால், அப்போது, அந்த நெரிசலை உடனடியாக இலகுவாக்க வழி செய்யப்படும். இது குறித்து சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இதற்காக, பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு என மூன்று வண்ண குறியீடு அமைப்புகள் இருக்கும். ஒரு டோல் பிளாசாவில் போக்குவரத்து சிவப்பு கோட்டைக் கடந்தவுடன், டோல் பிளாசாவின் நெரிசலை இலகுவாக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படும். இருப்பினும், இது இன்னும் ஒரு பைலட் திட்டமாக சோதிக்கப்படுகிறது.
வாகனத்தின் ஆவணங்களைக் காட்ட மக்கள் போக்குவரத்து போலீசிடம் செல்ல அவசியமில்லை. உங்கள் வாகன ஆவணங்கள் RFID மூலம் ஸ்கேன் செய்யப்படும். நீங்கள் எங்கும் நிறுத்த வேண்டிய அவசியமும் இருக்காது. இது காவல்துறை மற்றும் பயணிகளின் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.
சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சகம் இப்போது FASTag பாதையில் காத்திருப்பு நேரம் வேகமாக குறைந்து வருவதாகக் கூறியுள்ளது. முன்னதாக காத்திருப்பு நேரம் 464 வினாடிகளாக இருந்தது. இப்போது அது 150 வினாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, FASTag போன்ற மின்னணு கட்டணம் செலுத்தும் முறைகள் காரணமாக மக்களுடைய பொன்னான நேரம் மிச்சமாகிறது.