அட்டகாசமான அம்சங்களுடன் மிகக் குறைந்த விலையில் வருகிறது Maruti Suzuki Alto-வின் புதிய மாடல்
மாருதி மற்றும் ஆல்டோவின் கூட்டு தயாரிப்பான மாருதி ஆல்டோ 2021 இன் புதிய மாடல் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் இது இந்தியாவின் சாலைகளில் இயக்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Maruti Suzuki Alto 2021 அதன் வரம்பிலான கார்களில் ஒரு சிறந்த கார் என்று விவரிக்கப்படுகிறது. புதிய ஆல்டோ நிறுவனத்தின் புகழ்பெற்ற HEARTECT தளத்தை அடிப்படையாகக் கொண்டது. இதன் அடிப்படையில் தான் வேகன்ஆர் மற்றும் எஸ்-பிரஸ்ஸோ போன்ற கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
Maruti Suzuki Alto 2021-வின் அதிகாரப்பூர்வ விலை பற்றி நிறுவனம் குறிப்பிடவில்லை என்றாலும், டெல்லியில் அதன் விலை சுமார் 3 லட்சம் ரூபாய் இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
இந்திய சந்தையில் மலிவான கார்களுக்கு நல்ல தேவை உள்ளது. மாருதி சுசுகி ஆல்டோ 2021 இன் குறைந்த விலை மற்றும் சிறந்த அம்சங்கள் ஆகியவற்றின் காரணமாக, இது அறிமுகத்திற்கு முன்னரே மக்களுடைய கவனத்தை கவர்ந்துள்ளது, மக்கள் இதன் அறிமுகத்திற்காக காத்திருக்கிறார்கள்.