உலகின் அழகான நாடாளுமன்ற மாளிகைகள் இதோ

Thu, 10 Dec 2020-6:29 am,

இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மிக நேர்த்தியான முறையில் இருக்கும் என எதிர்பாக்கப்படுகின்றது. உலகெங்கிலும் பல நாடாளுமன்ற வளாகங்கள் உள்ளன. அவை தோற்றத்தில் மிகவும் கவர்ச்சிகரமாகவும் நேர்த்தியாகவும் உள்ளன. இதில் உலகின் பல நாடுகளை ஆண்ட நாட்டின் நாடாளுமன்ற கட்டிடமும் அடங்கும்.

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடாளுமன்ற கட்டிடங்களின் மூலமாகக் கருதப்படுகிறது. தேம்ஸ் நதிக்கரையில் கட்டப்பட்ட இந்த நாடாளுமன்ற மாளிகை சார்லஸ் பெர்ரி மற்றும் அகஸ்டஸ் வெல்பி புகின் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது. இந்த கட்டிடத்தின் அழகு உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை எலிசபெத் டவர், புதிய அரண்மனை மற்றும் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் என அழைக்கப்படும் மூன்று கோபுரங்களைக் கொண்டுள்ளது. 1987 முதல் அதன் தனித்துவமான வடிவமைப்பு காரணமாக இந்த கட்டிடம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களின் ஒரு பகுதியாக உள்ளது. Photo Credits: Social Media

இலங்கையின் நாடாளுமன்ற மாளிகையும் உலகின் மிகச்சிறந்த நாடாளுமன்ற கட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த கட்டிடத்தின் கட்டுமானத்திற்கு நான்கு ஆண்டுகள் ஆனது. அதன் வரைபடத்தை இலங்கை கட்டிடக் கலைஞர் ஜோஃப்ரி பாவா வரைந்தார். இது இலங்கை பௌத்த கட்டிடங்களுக்கு மேலதிகமாக ஒரு முத்திரையைக் கொண்டுள்ளது. மேலும், இந்த கட்டிடத்தின் அனைத்து கதவுகளும் வெள்ளி போல பளபளப்பாக உள்ளன. இந்த நாடாளுமன்ற வளாகத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், இது ஒரு ஏரிக்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. அங்கிருந்து இயற்கையின் அழகிய காட்சிகளைக் காண முடியும். Photo Credits: Social Media

 

ஆசிய நாடுகளின் நாடாளுமன்றங்கள் மிகவும் அழகாக அமைந்தவையாகும். அவற்றில் ஒன்று பங்களாதேஷ் நாடாளுமன்ற சபை. டாக்காவில் அமைந்துள்ள இந்த கட்டிடம் ஒரு செயற்கை ஏரியின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் வெளியில் இருந்து பார்க்கும்போது ஒரு கட்டிடம் போல் தோன்றினாலும், 8 கட்டிடங்கள் ஒன்றாக இதி இணைக்கப்பட்டுள்ளன. Photo Credits: Social Media

 

ஐரோப்பிய நாடான ருமேனியாவின் நாடாளுமன்ற மாளிகை வலுவான நாடாளுமன்ற கட்டிடங்களில் ஒன்றாகும். புக்கரெஸ்டில் அமைந்துள்ள இந்த கட்டிடத்தை கட்டிடக் கலைஞர் என்கா பாட்ரிசியா வடிவமைத்துள்ளார். இந்த கட்டிடத்தை கட்ட 20,000 வீரர்கள் மற்றும் கைதிகள் இரவும் பகலும் உழைத்தனர்.  இந்த நாடாளுமன்ற இல்லத்தின் உள் பகுதி பளிங்குகளால் ஆனது. இந்த கட்டிடத்தில் 8 உளவுத்துறை சுரங்கங்களும் உள்ளன. இதனால் எம்.பி.க்கள் அவசரமாக வெளியேற்றப்பட வேண்டிய சூழலில் உதவி கிடைக்கும். Photo Credits: Social Media

ஸ்காட்லாந்தின் நாடாளுமன்ற மாளிகையும் மிகவும் அழகாக இருக்கிறது. பல கட்டிடங்கள் ஒன்றாக சேர்ந்துள்ள இந்த கட்டிடத்தின் சிறப்பு என்னவென்றால், அனைத்து கட்டிடங்களும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டவை. இந்த நாடாளுமன்ற மாளிகையின் வரைபடம் கட்டிடக் கலைஞர் என்ரிக் மிராலஸால் தயாரிக்கப்பட்டது. ஆனால் வரைபடத்தைத் தயாரித்தவுடன் அவர் இறந்தார். இருப்பினும், வரைபடத்தை மாற்றாமல், அப்படியே கட்டி முடித்தார்கள். Photo Credits: Social Media

ஜெர்மனியின் நாடாளுமன்ற மாளிகையும் மிகவும் அழகாக இருக்கிறது. ஜெர்மனியின் தலைநகரான பேர்லினில் அமைந்துள்ள இந்த கட்டிடம் 1884-1894 ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டது. இருப்பினும், இது ஹிட்லரின் காலத்திலிருந்து கணிசமான மாற்றங்களைக் கண்டது. தொண்ணூறுகளில், பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் நார்மன் ஃபாஸ்டர் அதில் பல மாற்றங்களைச் செய்தார். Photo Credits: Social Media

பின்லாந்தில் உள்ள நாடாளுமன்ற மாளிகை மிகவும் அழகாகவும் வலுவாகவும் உள்ளது. இந்த நாடாளுமன்ற சபை நாட்டின் பலத்தைக் காட்டுகிறது. இந்த கட்டிடம் கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இருப்பினும், கட்டிடத்திற்குள் வண்ணங்களின் கணிசமான பயன்பாடும் உள்ளது. Photo Credits: Social Media

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link