ஆதார் அட்டையை OTP மூலம் பதிவிறக்கம் செய்யலாம்: DigiLocker இதில் உங்களுக்கு உதவும்!!

Fri, 08 Jan 2021-7:04 pm,

ஒரு அட்டைதாரர் நான்கு எளிய படிகளில் ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்யக்கூடிய ஐந்து வழிகளில் டிஜிலோக்கர் ஒன்றாகும். புகைப்படம்: ராய்ட்டர்ஸ்

டிஜிலொக்கர் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன் (UIDAI) இனைந்ததால், அட்டைதாரர்கள் OTP மூலம் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வது சாத்தியமாகியுள்ளது. இதனால் ஆதார் அட்டைதாரர்கள் இனி தங்கள் டிஜி லாக்கர் அகௌண்டை ஆதாருடன் இணைகக் முடியும். புகைப்படம்: பி.டி.ஐ.

இது டிஜிட்டல் வடிவத்தில் ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்குதல், சேமித்தல், பகிர்வு மற்றும் சரிபார்ப்பு செய்வதற்கான க்ளௌட் சார்ந்த தளமாகும். இது இந்திய குடிமக்களுக்கு ஒதுக்கப்பட்ட டிஜிட்டல் லாக்கர்களில் மின்னணு நகல்களை வழங்க பதிவு செய்யப்பட்ட நிறுவனத்திற்கு உதவுகிறது. புகைப்படம்: பி.டி.ஐ.

 

டிஜிலாக்கர் கணக்கிலிருந்து OTP மூலம் ஆதார் அட்டை பதிவிறக்கம்:

1] டிஜிலோக்கரின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான digilocker.gov.in –ல் உள்நுழைந்து, ‘Sign In’பட்டனைக் கிளிக் செய்யவும்.

2] உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு உங்கள் டிஜிலாக்கர் கணக்கில் உள்நுழைய வேண்டும். பின்னர் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP ஐப் பெற ‘Verify’ பொத்தானைக் கிளிக் செய்ய்வும்.

3] உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிட்டு 'Verify OTP' பொத்தானைக் கிளிக் செய்யவும்

4] ‘Issued Document’ பக்கம் தோன்றும். இப்போது நீங்கள் ‘Save’ ஐகானைப் பயன்படுத்தி உங்கள் e-Aadhaar-ஐப் பதிவிறக்கம் செய்யலாம். புகைப்படம்: யுஐடிஏஐ ட்விட்டர்

மேலே குறிப்பிட்டுள்ள நான்கு எளிய வழிமுறைகளைப் பின்பற்றி, டிஜிலாக்கர் கணக்கைப் பயன்படுத்தி OTP மூலம் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். புகைப்படம்: யுஐடிஏஐ ட்விட்டர்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link