அதிரடியான விலை, அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் Poco X3 Pro அறிமுகம்

Fri, 02 Apr 2021-6:38 pm,

எங்கள் இணை வலைத்தளமான bgr.in இன் படி, Poco X3 Pro-வின் பிரதான கேமரா 48 மெகா பிக்சல்களைக் கொண்டது. மேலும், இதில் 20 மெகா பிக்சல்கள் கேமராவும் உள்ளது.

தகவல்களின்படி, Poco X3 Pro-வில் மிகவும் சக்திவாய்ந்த பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்திய பயனர்களை மனதில் கொண்டு, நிறுவனம் Poco X3 Pro-வில் 5160mAh பேட்டரியை வழங்கியுள்ளது. இதன் காரணமாக, ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்டால், இந்த தொலைபேசி நீண்ட நேரம் வரை நீடிக்கும்.

 

இந்தியாவில் Poco X3 Pro-வின் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ .18,999 ஆகும். இந்த தொலைபேசியின் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வகையை ரூ .20,999 க்கு வாங்கலாம். புதிய ஸ்மார்ட்போன் கிராஃபைட் பிளாக், ஸ்டீல் ப்ளூ மற்றும் கோல்டன் பிரான்ஸ் வண்ணங்களில் விற்பனை செய்யப்படும்.

Poco X3 Pro-வில் 6.67 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே உள்ளது. இது முழு எச்டி + ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 450 nits பிரைட்னஸ், HDR10, கொரில்லா கிளாஸ் 6 ப்ரொடெக்‌ஷன் மற்றும் சென்டர் பஞ்ச் ஹோலுடன் வருகிறது. தொலைபேசியில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 ப்ராசசர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ப்ராசசர் 2019 இல் வந்த ஸ்னாப்டிராகன் 855 இன் சிறந்த பதிப்பாகும். இந்த சாதனம் Android 11 ஐ அடிப்படையாகக் கொண்ட MIUI 12 உடன் வருகிறது. 

கைபேசியில் குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதன் முக்கிய லென்ஸ் 48MP-ஐக் கொண்டது. இதனுடன் ஒரு 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகியவை உள்ளன. முன்பக்கத்தில் ஒரு 20MP லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசிக்கு (Smartphone) அதிக ஆற்றலை அளிக்க, 5160mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது 33W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. ஸ்மார்ட்போனில் இரட்டை சிம் 4G, டூயல் பேண்ட் வைஃபை 6, புளூடூத் v 5.0, GPS, NFC, 3.5 mm ஆடியோ ஜாக் ஹோல் மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை உள்ளன. இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஒரு கைரேகை சென்சாரும் உள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link