PF விவரங்கள் இனி Whatsapp-ல் கிடைக்கும்: கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி
ஜீ நியூசின் செய்தியின்படி, EPFO-வின் 138 பிராந்திய அலுவலகங்களிலும் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து உறுப்பினர்களும் வாட்ஸ்அப் செய்தி மூலம் புகார் அளிக்கலாம். உங்கள் பகுதியின் வாட்ஸ்அப் எண்ணை அறிய, கணக்கு வைத்திருப்பவர் EPFO இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.epfindia.gov.in -ல் பார்வையிடவும். இது தவிர epfindia.gov.in என்ற இணைப்பிலிருந்து, உங்கள் பகுதி எண்ணைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
EPFO இன் பிற அம்சங்கள் EPFIGMS போர்டல் (ஆன்லைன் புகார் தீர்வு போர்டல்), CPGRAMS, சமூக ஊடக தளங்கள் (பேஸ்புக் மற்றும் ட்விட்டர்) மற்றும் 24 மணி நேர கால் சென்டர் ஆகியவை அடங்கும். Https://www.epfindia.gov.in/site_docs / PDFs / Downloads_PDFs / WhatsApp_Helpl ... மூலம் உங்களுக்கு முழுமையான உதவி கிடைக்கும்.
மக்கள் தாங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை எடுக்கும்போது இடைத்தரகர்களின் கையில் மாட்டிக்கொள்ளக்கூடாது என EPFO இந்த முயற்சியை எடுத்துள்ளது. PF கணக்கு வைத்திருக்கும் ஒருவர் PF அலுவலகத்துக்கு செல்லும்போது சில சமயம் இடைத்தரகர்களிடம் சிக்கிக்கொள்கிறார். கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் பிரச்சினைகளை ஆன்லைன் மூலம் தீர்க்க வெண்டும் என்று அரசாங்கம் முயற்சி செய்கிறது. இதன் மூலம் மக்கள் தாங்கள் கடினமாக உழைத்து ஈட்டிய தொகையை முழுமையாகப் பெறுவார்கள். குறுகிய காலத்தில் பணம் மாற்றப்படுவதால், இந்த அமைப்பு மீதான மக்களின் நம்பிக்கையும் அதிகரிக்கும்.
ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் PF கணக்கிற்கு செல்கிறது. நிறுவனமும் இதில் தனது பங்களிப்பை அளிக்கிறது. ஆண்டு முழுவதும் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வட்டி செலுத்தப்படுகிறது.
பொதுவாக, பி.எஃப் கணக்கின் வட்டி விகிதம் மற்ற கணக்கின் வட்டி விகிதத்தை விட மிக அதிகமாக இருக்கும். 2020-21 நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.