Maldives-ல் தன் பிறந்த நாளை ஆனந்தமாய் கொண்டாடிய சுரேஷ் ரெய்னா
மாலத்தீவின் அழகிய சூழலில் சுரேஷ் ரெய்னாவுக்கு அவரது மனைவி பிரியங்கா சவுத்ரி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பிரியங்கா சவுத்ரி இன்ஸ்டாகிராமில், “என் அன்பே, உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் எப்போதும் இப்படி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” என்று எழுதினார்.
சுரேஷ் ரெய்னா, தனது பிறந்த நாளில் தனக்கு வாழ்த்துக்களை அனுப்பிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் என்றார்.
சுரேஷ் ரெய்னா தனது பிறந்த நாளை அற்புதமாகத் தொடங்கினார். ரெய்னா இன்ஸ்டாகிராமில், “பிறந்தநாள் காலை ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான காலை உணவோடு துவங்குகிறது” என்று எழுதினார்.
இந்த விடுமுறையில் சுரேஷ் ரெய்னா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு லாக்டௌனுக்கு பின்னர் அவர் தனது குடும்பத்துடன் விடுமுறைக்கு வருவது இதுவே முதல் முறை.
சுரேஷ் ரெய்னாவின் மகள் கிரேசியா ரெய்னா மாலத்தீவின் நீல கடற் கரையில் குதித்து விளையாடியபடி காணப்பட்டார்.
சுரேஷ் ரெய்னா, தனது குடும்பத்தினருடன், மாலத்தீவில் உள்ள ஹெரிடன்ஸ் ஆராவின் ஹெரிடேஜ் ரிசார் என்ற அற்புதமான இடத்தில் தங்கியுள்ளார்.
விடுமுறை நாட்களில், சுரேஷ் ரெய்னா சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். அவர் தொடர்ந்து தனது இடுகைகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொள்கிறார். பல பிரபலங்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவற்றிற்கு அவர் நன்றி தெரிவித்தார்.