மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம்: 1978-ல் 900-க்கும் மேற்பட்டோரை ஒன்றாக பலி வாங்கிய பரிதாபம்!!

Tue, 17 Nov 2020-5:17 pm,

அமெரிக்காவிற்கு அருகிலுள்ள கயானாவின் ஜோன்ஸ்டவுனில் 900 க்கும் மேற்பட்டோர் ஒன்றாக தற்கொலை செய்து கொண்ட ஒரு இதயத்தை அதிர வைக்கும் மூடநம்பிக்கை பற்றி உங்களுக்குத் தெய்யுமா? Photos: Social Media

 

இந்த சம்பவம் இன்றுவரை நடந்த மிகப்பெரிய தற்கொலை சம்பவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நவம்பர் 18, 1978 அன்று நடந்த இந்த சம்பவம் பற்றி கேட்கும் அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். இந்த சம்பவத்தின் பின்னணியில் ஜிம் ஜோன்ஸ் என்ற மத ஆசிரியர் இருந்தார். அவர் தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறிக்கொண்டார். 1956 ஆம் ஆண்டில், ஜிம் ஜோன்ஸ் 'மக்கள் கோயில்' என்ற பெயரில் ஒரு தேவாலயத்தை கட்டினார். அவருடைய மதம் சார்ந்த உரைகள் மற்றும் மூட நம்பிக்கைகள் காரணமாக ஆயிரக்கணக்கானோர் அவரை பின்பற்றத் தொடங்கினர். Photos: Social Media

ஜிம் ஜோன்ஸ் கம்யூனிச சித்தாந்தத்தை கொண்டவர். அமெரிக்க அரசாங்கத்திலிருந்து வேறுபட்டிருந்தார். எனவே அவர் தனது சீடர்களுடன் நகரத்திலிருந்து கயானா காடுகளுக்குச் சென்று அங்கு ஒரு சிறிய கிராமத்தையும் நிறுவினார். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, அவரது உண்மை பற்றி மக்களுக்கு தெரிய வந்தது. அவர் தம்மைப் பின்பற்றுபவர்களை (பெண்கள் அல்லது ஆண்களாக இருந்தாலும்) பகல் முழுவதும் வேலை செய்ய வைத்தார். இரவில் அவர்கள் சோர்வாக தூங்கச் செல்லும்போது, ​​அவர்களைத் தூங்க விடாமல் தனது உரையைத் துவக்குவார். Photos: Social Media

இது மட்டுமல்லாமல், யாராவது தூங்கிக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டால், அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. ஜிம் ஜோன்ஸ் தனது ஆதரவாளர்களை கிராமத்திலிருந்து வெளியேற அனுமதித்ததில்லை. ஆண்களும் பெண்களும் பணியில் இருக்கும்போது, ​​அவர்களின் குழந்தைகள் ஒரு சமூக மண்டபத்தில் வைக்கப்பட்டனர். அங்கிருந்து யாரும் தப்பிக்காதபடி அவரது வீரர்கள் இரவு பகலாக கிராமத்தை சுற்றி வந்தனர். Photos: Social Media

 

ஜிம் ஜோன்ஸின் மூடநம்பிக்கை வலை பரவியது. அவர் தம்மைப் பின்பற்றுபவர்களிடம் எதை கூறினாலும், மக்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள். இதற்கிடையில், அங்கு நடக்கும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அரசுக்கு தெரிய வந்தது. ஜிம் ஜோன்ஸ் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கம் யோசித்தது. ஆனால் ஜிம் ஜோன்ஸும் இதை அறிந்ததும், தம்மைப் பின்பற்றுபவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூடும்படி கேட்டுக்கொண்டார். Photos: Social Media

 

ஜோன்ஸ் ஏற்கனவே ஒரு பெரிய தொட்டியில் ஆபத்தான விஷத்தை கலந்து ஒரு குளிர்பானத்தை தயாரித்து வைத்திருந்தார். அதை மக்களுக்கு குடிக்கக் கொடுத்தார். இந்த நேரத்தில், விஷ பானங்களை குடிக்க மறுத்தவர்களுக்கும் அது வலுக்கட்டாயமாக அளிக்கப்பட்டது. இந்த வகையில், மூடநம்பிக்கையை பின்பற்றியதால், 900 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். இவர்களில் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடங்குவர். இந்த சம்பவம் இதுவரை நடந்த மிகப்பெரிய படுகொலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மக்கள் இறந்த பிறகு, ஜிம் ஜோன்ஸின் உடலும் ஒரு இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டாரா அல்லது அவரது உத்தரவின் பேரில் யாராவது அவரை சுட்டுக் கொன்றார்களா என்பது தெளிவாகவில்லை. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link