அதிகரிக்கும் தொற்றால் மீண்டும் மூடும் பள்ளிகள்: எங்கு, எந்த வகுப்புகள் வரை? விவரம் இங்கே
மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அறிக்கையின்படி, தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் 9,10 மற்றும் 11 வகுப்புகளுக்கு 2021 மார்ச் 2 முதல் மேலதிக அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன. Source: PTI
முன்னதாக, உத்தரப்பிரதேச அரசு 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை 8 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளையும் மூட முடிவு செய்திருந்தது. இருப்பினும், இப்போது 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் 2021 ஏப்ரல் 4 ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என அரசாங்கம் முடிவு செய்துள்ளது. Source: PTI
அதிகரித்து வரும் COVID-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, சமீபத்தில், பஞ்சாப் அரசு 2021 ஏப்ரல் 10 வரை மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. முன்னதாக, பஞ்சாப் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மார்ச் 31, 2021 வரை மூட உத்தரவிட்டிருந்தது. Source: PTI
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை, 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூட அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 2020 டிசம்பர் 4 ஆம் தேதி எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மார்ச் 31, 2021 வரை பள்ளிகள் மூடப்பட்டடிருக்கும் என மத்தியப் பிரதேச பள்ளி கல்வித் துறை தெரிவித்திருந்தது. அதிகரித்து வரும் COVID-19 தொற்று காரணமாக, தற்போது இது ஏப்ரல் 15, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Source: PTI
கோவிட் -19 தொற்று எண்ணிக்கையில் ஏற்பட்ட எழுச்சியால் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 10 ஆம் தேதி வரை ஆஃப்லைன் வகுப்புகளை நிறுத்த குஜராத் அரசை உத்தரவிட்டுள்ளது. Source: PTI
கோவிட் -19 தொற்றின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதால் மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடிகள் மூடப்படும் என்று சத்தீஸ்கர் அமைச்சர் ரவீந்திர சவுபே 2021 மார்ச் 21 அன்று தெரிவித்தார். Source: PTI