2022 சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆண்டாக இருக்க டிப்ஸ்

Fri, 07 Jan 2022-3:09 pm,

வீட்டு உபகரணங்களைப் பயன்படுத்தும் விதம், அவை உட்கொள்ளும் ஆற்றலைக் குறைத்து, வீட்டுச் செலவைக் குறைப்பது மட்டுமல்லாமல், ஆற்றலையும் சேமிக்கும். வாஷிங் மெஷின், பிரிட்ஜ் என மின்சாரத்தால் இயங்கும் பொருட்களை முறைப்படி பயன்படுத்தவும்.

(புகைப்படம்: ட்விட்டர்)

உணவுப் பொருட்களைப் வைக்க க்ளிங் ஃபிலிம்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவது மிகவும் கடினம் என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் சந்தையில் ஆரோக்கியமான மாற்று வழிகள் உள்ளன, அதை மாற்றுவதற்கான நேரம் இது. 2022ல் இது ஒரு முக்கியமான நடவடிக்கையாக இருக்கட்டும். 

கழிவுகளை குறைக்க முயற்சிக்கவும். மறு பயன்பாடு என்பது கழிவுகளை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி. உங்கள் வீட்டில் அத்தியாவசியப் பொருட்களை நிரப்புவதற்கு புதிய பாட்டிலை வாங்குவதற்குப் பதிலாக, பலமுறை பயன்படுத்தக்கூடிய கொள்கலன்களை மீண்டும் பயன்படுத்துவது நல்லது.

(Photograph:Twitter)

ஷாப்பிங்கிற்கான துணி பைகள் ஒவ்வொரு கடையிலும் அல்லது பல்பொருள் அங்காடியிலும் உடனடியாகக் கிடைக்கும் பிளாஸ்டிக் பைகளை எடுப்பது எப்போதுமே எளிதானது, ஆனால் சணல்/பருத்திப் பையை எடுத்துச் சென்று அதில் பொருட்களை வாங்கவும். அவை சுற்றுச்சூழலுக்கு சிறந்தவை.

(Photograph:Twitter)

 

சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களுக்கு மாறவும். குளியல் முதல் வீட்டை சுத்தீகரிக்கும் பொருட்கள் வரை சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார நன்மைகளைக் கொண்ட தூய்மையான மாற்றுகளைத் தேர்வுசெய்ய முயற்சிக்கவும். விலங்குகளில் சோதிக்கப்படாத மற்றும் அவற்றில் நச்சு கூறுகளை சேர்க்காத ஒப்பனை மற்றும் அழகு சாதனங்களை பயன்படுத்தவும்.

LEDக்கு மாறவும் ஆற்றல் சேமிப்புக்கு உதவும் LED பல்புகள் பாரம்பரிய விளக்குகளை விட 80% அதிக திறன் கொண்டதாக இருக்கும். அவை ஆறு மடங்கு நீண்ட காலம் நீடிக்கும். ஃப்ளோரசன்ட் போல தீங்கு விளைவிக்கும் நச்சு கூறுகள் இல்லை. உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பல்புகளையும் எல்இடியாக மூலம் மாற்றினால், கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் குறைக்கலாம். (புகைப்படம்: ட்விட்டர்)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link