இரண்டு முறைக்கு மேல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் பட்டியல்!
இரண்டு முறைக்கு மேல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி இன்று பெற உள்ளார். உலக தலைவர்கள் மத்தியில் மோடியின் பெயரும் இடம் பெற உள்ளது.
1932 முதல் 1944 வரை நடந்த நான்கு ஜனாதிபதி தேர்தல்களில் முன்னாள் அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் வெற்றி பெற்றுள்ளார். இரண்டு முறைக்கு மேல் பதவி வகித்த கடைசி அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் ஆவார்.
2005 முதல் 2017 வரை தொடர்ந்து நான்கு தேர்தல்களில் வெற்றி பெற்று சாதனை படைத்து இருந்தார் முன்னாள் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின்.
சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ 1968 மற்றும் 1988க்கு இடையில் தொடர்ச்சியாக ஆறு முறை தேர்தலை சந்தித்து அதில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்ற ஒரே இந்தியப் பிரதமராக இருந்தார். இந்த சாதனையை இன்று மோடி சமன் செய்ய உள்ளார்.
பிரதமர் மோடி இன்று மாலை 7.15 மணிக்கு மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்க உள்ளார். ராஷ்டிரபதி பவன் வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.