PMAY : புதிய வீடு கட்ட சூப்பர் வாய்ப்பு, நிதியுதவி கொடுக்கும் மத்திய அரசு! விண்ணப்பிப்பது எப்படி?

Fri, 06 Dec 2024-9:25 am,

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) 2.0 இன் கீழ், 3 கோடி கூடுதல் வீடுகளை கட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மாத வருமானம் ரூ.15,000 உள்ளவர்களும் தகுதி பெறுவார்கள். பயனாளிகளுக்கு 90 நாட்களில் வீடு வழங்கப்படும். இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை எளிமையானது.  தகுதியான நபர்களை விரைவில் கண்டறிய கணக்கெடுப்பு நடக்க உள்ளது. 

இந்த திட்டத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சொந்த வீடு என்ற கனவை நனவாக்க இத்திட்டம் ஒரு சூப்பர் வாய்ப்பாகும். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana) என்பது மத்திய அரசு திட்டம். இது நாட்டின் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு வீடுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் 25 ஜூன் 2015 அன்று மத்திய அரசால் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் லட்சக்கணக்கான மக்களின் சொந்த வீடு என்ற கனவை நனவாக்க உதவியது.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 இல், மத்திய அரசு இப்போது கூடுதலாக 3 கோடி வீடுகளை கட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது, இதற்காக இந்த நிதியாண்டில் ரூ.10 லட்சம் கோடி செலவிடப்பட உள்ளது. இந்த நிலையில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 இல் தகுதி நிபந்தனைகளில் சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக மக்கள் கூடுதல் திட்டத்தின் பலன்களைப் பெற முடியும். முன்னதாக, 10,000 ரூபாய் வரை மாத வருமானம் உள்ளவர்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். 

ஆனால், தற்போது இந்த வரம்பு மாதம் ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர ஏற்கனவே இருந்த பல நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. நகர்புறம் மற்றும் கிராம அளவில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒருவேளை நீங்கள் இந்த திட்டத்தின் கீழ் பலன் பெற விரும்பினால், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள நபர்கள் PM Awas Yojana-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான pmaymis.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

இணையதளத்தில் உள்ள "Benefits under other 3 components" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். ஆதார் அட்டை எண் மற்றும் பெயரை உள்ளிடவும். ஆதார் எண்ணைச் சரிபார்த்த பிறகு, விண்ணப்பப் பக்கம் திறக்கும், அதில் விண்ணப்பதாரர் தனது அனைத்து தகவல்களையும் நிரப்ப வேண்டும். தேவையான அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்த பிறகு, கேப்ட்சாவை உள்ளிட்டு "Save" பட்டனை கிளிக் செய்யவும்.

விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அதன் பிரிண்ட் அவுட் எடுத்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். இதற்குப் பிறகு, அருகிலுள்ள பொது சேவை மையம் (CSC) அல்லது வங்கிக்குச் சென்று தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கவும். ஐடி அல்லது பெயர், தந்தையின் பெயர் மற்றும் மொபைல் எண் மூலம் விண்ணப்பத்தின் நிலையை இணையதளத்தில் கண்காணிக்கலாம்.

குடும்பத்தில் யாரேனும் ஒருவர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் வயது 70 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் பெயரிலோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலோ ஏற்கனவே வீடு இருக்கக் கூடாது. பயனாளி எந்த ஒரு அரசு வீட்டுத்திட்டத்தின் பயனையும் இதற்கு முன் பெற்றிருக்கக் கூடாது. வீட்டின் உரிமை பெண்ணின் பெயரில் இருக்க வேண்டும்.

பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவு (EWS), குறைந்த வருமானக் குழு (எல்ஐஜி), நடுத்தர வருமானக் குழு-1 (MIG-I), நடுத்தர வருமானக் குழு-2 (எம்ஐஜி-II) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும். அந்தந்த பிரிவினருக்கு பொருளாதார அளவுகோல்களின் அடிப்படையில் மத்திய அரசு மானியம் கிடைக்கும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link