Pongal 2024 Movies: பொங்கலன்று ஒளிபரப்பாகும் புதுப்படங்கள்! எந்த சேனலில் எதை பார்க்கலாம்?
பொங்கலன்று, புதிய படங்கள் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பாகின்றன. அப்படி ஒளிபரப்பாகும் புது படங்களை எந்த சேனலில் எந்த நேரத்தில் பார்க்கலாம்? இங்கு பார்ப்போம்.
சரத்குமார், அமிதாஷ் நடிப்பில் வெளியான பரம்பொருள் திரைப்படம் விஜய் தொலைகாட்சியில் ஜனவரி 15ஆம் தேதியன்று மாலை 5:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்த படம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படம் ஜனவரி 16ஆம் தேதியன்று மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம், சன் தொலைக்காட்சியில் ஜனவரி 16ஆம் தேதியன்று மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
அருள் நிதி இயக்கத்தில் வெளியான படம், கழுவேத்தி மூர்க்கன். இந்த படத்தில் துஷாரா விஜயன்,சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம், கலைஞர் தொலைக்காட்சியில் ஜனவரி 15ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இறைவன் படம், வரும் 16ஆம் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படம், 15ஆம் தேதியன்று மதியம் 12:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இன்று மாலை 3:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.