புதன் வக்ர நிவர்த்தி: இந்த ராசிகள் வாழ்வில் சூர்யோதயம், மகிழ்ச்சி மழையாய் பொழியும்

Wed, 25 Jan 2023-4:26 pm,

இந்த நேரத்தில் நீங்கள் மனதளவில் சமநிலையுடன் இருப்பீர்கள். தொழில் தொடர்பான சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உங்கள் தந்தையுடனான உறவிலும் முன்னேற்றம் காண்பீர்கள். புதனின் மாற்றத்தால் அதிர்ஷ்டமும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். 

மிதுன ராசிக்காரர்கள் சமூக மட்டத்தில் மரியாதை பெறுவார்கள். கூட்டுத் தொழில் செய்தால் லாபம் கிடைக்கும். கலை, எழுத்து, பாடல் போன்ற துறைகளில் இருப்பவர்கள், அவர்களின் திறமையால் இந்தக் காலத்தில் நன்மைகள் பெறலாம். அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டு நிலைமை சிறப்பாக இருக்கும்.

பணியிடத்திலும் தொழிலிலும் நல்ல லாபம் ஈட்டுவீர்கள். எனினும், இந்த நேரத்தில் உங்கள் போட்டியாளர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். ரகசிய விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.

 

துலாம் ராசி மாணவர்கள் கல்வித்துறையில் விரும்பிய பலன்களைப் பெறலாம். இதுமட்டுமின்றி, இந்த நேரத்தில் உங்கள் தகவல் தொடர்பு திறன் மேம்படும். இதன் மூலம் பத்திரிகை அல்லது அரசியல் துறையில் இருப்பவர்கள் நிறைய லாபம் சம்பாதிக்கலாம்.

வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக ஏதேனும் போட்டித் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்தால் அதிலும் பலன் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வணிக நிலைமையும் சிறப்பாக இருக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link