Post Office MIS: ஒரு முறை முதலீடு செய்து மாதா மாதம் வருமானம் பெறும் அசத்தல் திட்டம்
MIS கணக்கிற்கு, நீங்கள் அஞ்சலகத்தில் அதாவது தபால் நிலையத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும். உங்களிடம் அடையாள அட்டைக்கு ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் போன்றவை இருக்க வேண்டும். நீங்கள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை வழங்க வேண்டும். முகவரி சான்றுக்காக, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது பயன்பாட்டு பில் ஆகியவற்றை கொடுக்கலாம். இந்த ஆவணங்களுடன் நீங்கள் தபால் அலுவலகத்திற்குச் சென்று தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தின் படிவத்தை நிரப்ப வேண்டும். நீங்கள் அதை ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்யலாம். படிவத்தை நிரப்புவதோடு, பரிந்துரைக்கப்பட்டவரின் பெயரையும் (நாமினி பெயர்) கொடுக்க வேண்டும். இந்தக் கணக்கைத் தொடங்க, துவக்கத்தில், 1000 ரூபாயை ரொக்கமாகவோ அல்லது காசோலை மூலமோ டெபாசிட் செய்ய வேண்டும்.
நீங்கள் ஒரு தபால் அலுவலகத்திலிருந்து மற்றொரு தபால் அலுவலகத்திற்கு MIS கணக்கை மாற்றலாம். முதிர்வு அதாவது ஐந்து வருடங்கள் நிறைவடையும் போது, அதை மேலும் 5-5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். எம்ஐஎஸ் கணக்கில் நியமன வசதி (நாமினேஷன்) உள்ளது. இந்தத் திட்டத்தில் பணம் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும்.
MIS இன் முதிர்வு ஐந்து ஆண்டுகள் ஆகும். இதை இதற்கு முன்னரும் முடித்துக் கொள்ளலாம். இருப்பினும், டெபாசிட் செய்த நாளிலிருந்து ஒரு வருடம் முடிந்த பின்னரே நீங்கள் பணத்தை எடுக்க முடியும். விதிகளின் படி, ஒரு வருடம் முதல் மூன்று வருடங்களுக்குள் பணம் எடுக்கப்பட்டால், வைப்புத்தொகையின் 2% திருப்பித் தரப்படும். கணக்கு தொடங்கிய 3 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுக்கு முன் எந்த நேரத்தில் நீங்கள் பணத்தை எடுத்தாலும், உங்கள் டெபாசிட்டில் 1% கழித்தபின் திருப்பித் தரப்படும்.
இந்தியா போஸ்ட்டின் படி, மாதாந்திர வருவாய் திட்டத்தில் ஆண்டுக்கு 6.6% வட்டி கிடைக்கிறது. இது ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படுகிறது. இந்திய குடிமக்கள் அனைவரும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
MIS-ல், இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து ஒரு கூட்டு கணக்கைத் தொடங்கலாம். இந்தக் கணக்கிற்கு ஈடாக பெறப்பட்ட வருமானம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சமமாக வழங்கப்படுகிறது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஒரு கூட்டு கணக்கை ஒரே கணக்காக மாற்றலாம். ஒற்றை கணக்கை கூட்டு கணக்காகவும் மாற்றலாம். கணக்கில் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய, அனைத்து கணக்கு உறுப்பினர்களும் சேர்ந்து கூட்டு விண்ணப்பம் கொடுக்க வேண்டும்.
தனி மற்றும் கூட்டு கணக்கை POMIS திட்டத்தில் திறக்கலாம். குறைந்தபட்சமாக ரூ .1,000 முதலீட்டில் கணக்கை தொடங்கலாம். ஒரு கணக்கில் அதிகபட்சமாக ரூ .4.5 லட்சம் முதலீடு செய்யலாம். கூட்டு கணக்கில் முதலீட்டு வரம்பு ரூ .9 லட்சம் ஆகும்.