பெளர்ணமி தினத்தின் முக்கியத்துவம் என்ன? பவுர்ணமியின் சிறப்பு தெரியுமா?

Thu, 25 Feb 2021-5:54 am,

தமிழ் ஆண்டின் முதல் மாதமான சித்திரையில் வரும் பவுர்ணமி சித்ரா பௌர்ணமி. மனிதராக பிறந்த அனைவரின் செயல்களையும் சித்ர குப்தன் தான் கணக்கு வைத்துக் கொள்வார் என்பது நம்பிக்கை. சித்திரை மாதம் வரும் பவுர்ணமி சித்ரகுபதனை வணங்கும் நாள். மதுரையில் மிகவும் சிறப்பாக அனுசரிக்கப்படும். சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள், சித்ரா பவுர்ணமியன்று சித்ரகுப்தனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.

அரக்கன் சூரனை அடக்க முருகன் அவதரித்த நாள். தீமைகள் அழியும், நன்மை நிலைக்கும் என்பதை உறுதிப்படுத்தும் தினம். திருச்செந்தூரின் அருகே இருக்கும் உவரி என்ற தளத்தில் வ் வைகாசி மாதம் வரும் பௌர்ணமி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகம் என்று வைகாசி மாத பெளர்ணமி கொண்டாடப்படுகிறது.  

 

ஆனி மாத பௌர்ணமி மூலம் நட்சத்திரத்தன்று வருவது. அன்று மா, பலா, வாழை உட்பட கனிகளை படைத்து இறைவனை வணங்குவது சிறப்பு. ஆனி பெளர்ணமி திருவையாற்றில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.  

ஆடி மாத பௌர்ணமி காக்கும் கடவுள் கலிவரதனுக்கு உகந்த நாள். காஞ்சிபுரத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்.  

ஆவணி மாத பௌர்ணமி அவிட்டம் நட்சத்திரத்தன்று வரும். இன்று தான் சகோதர-சகோதரிகளை இணைக்கும் ராக்கி எனப்படும் ரக்ஷாபந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

புரட்டாசி பௌர்ணமி: சிவசக்தியாக அருளும் உமாமகேஸ்வரரை வணங்கும் முக்கிய நாள்.  

ஐப்பசி பௌர்ணமியன்று லட்சுமி விரதமும், சிவனுக்கு அன்னாபிஷேகமும் செய்வது சிறப்பு. கங்கை கொண்ட சோழபுரத்தில் மிகச் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது.  

கார்த்திகைப் பௌர்ணமியன்று திருவிளக்கு தீபத் திருநாள்.  மும்மூர்த்திகளும் சேர்ந்து திருவிளையாடல் நடத்திய நாள். திருவண்ணாமலையில் மலையே ஜோதிப்பிழம்பாக நின்று மக்களுக்கு அருளும் நாள்.  

மார்கழி மாதப் பௌர்ணமி திருவாதிரை நட்சத்திரத்தன்று வரும். இறைவன் நடராஜனாய் காட்சியளித்த திருநாள். சிதம்பரத்திலும், திரு உத்தர கோசமங்கையிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது மார்கழி மாத பெளர்ணமி.  

தை மாதத்தில் வரும் பௌர்ணமி பூச நட்சத்திரத்தன்று நிகழும். மதுரையிலும், பழனியிலும் மிகுந்த சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.

மாசி மாதம் மகம் நட்சத்திர நாளன்று பவுர்ணமி வரும். இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. தெற்கே கும்பகோணத்திலும், வடக்கே அலகாபாத்திலும் மிக்க சிறப்புடன் கொண்டாடப்படும். அனைத்து ஆலயங்களிலும் அனுசரிக்கப்படும் மாசி மகத்தன்று புனிதத் தலங்களில் நீராடி சிவனை தரிசிப்பது சர்வ பாபங்களையும் போக்கி வீடு பேற்றை அருளும்.

பங்குனிப் பௌர்ணமி உத்திரம் நட்சத்திரத்தன்று வரும்.  சிவபெருமானுக்கும், அன்னை உமையாளுக்கும் திருமணம் நிகழ்ந்த நாள். பழனியில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link