பிரதான் மந்திரி ஜன்தன் திட்டம் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? மிக முக்கிய தகவல்
நாடு முழுவதும் எல்லாருக்கும் ஒரு வங்கி கணக்கு இருக்கணும்னு அரசாங்கம் நடைமுறைப்படுத்திய திட்டம் தான் பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா. 2014-ல் இருந்து இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
பூஜ்ஜிய பணம் வச்சு கணக்கு தொடங்கலாம்: இந்த கணக்கை தொடங்க பணம் எதுவும் வேண்டாம். ஒரு பைசா கூட வச்சு கணக்கு தொடங்கலாம்.
இலவச டெபிட் கார்டு: கணக்கு தொடங்கும்போது ஒரு இலவச டெபிட் கார்டு கொடுப்பாங்க. இந்த கார்டு வச்சு நம்ம பணத்தை எடுத்துக்கலாம், கடைகளில் பொருள் வாங்கலாம்.
காப்பீடு வசதி: இந்த கார்டு வச்சு நமக்கு 2 லட்ச ரூபாய் வரைக்கும் காப்பீடு கிடைக்கும். ஏதாவது விபத்து நடந்தா இந்த காப்பீடு நமக்கு உதவும்.
கடன் வாங்கலாம்: தேவைப்பட்டா, இந்த கணக்குல இருந்து கொஞ்சம் பணத்தை கடனா வாங்கிக்கலாம்.
இந்த திட்டத்தால நம்ம நாட்டுல உள்ள எல்லாருக்கும் வங்கி சேவை கிடைக்குது. இதனால நம்ம பணத்தை பாதுகாப்பா வச்சுக்கலாம், கடன் வாங்கலாம், பணத்தை வேற ஒருத்தருக்கு அனுப்பலாம்.
இணையம், மொபைல் போன் வழியாகவும் இந்த கணக்கை எளிமையாக வீட்டில் இருந்தபடியே தொடங்கிக் கொள்ளலாம். மற்ற வங்கி கணக்குகளைப் போலவே பணத்தை எப்போது வேண்டுமானாலும் அனுப்பலாம். ஏடிஎம் கார்டு கொடுக்கப்படும்.
இந்தியாவில் இருக்கும் எல்லோரும் பிரதான் மந்திரி யோஜனா திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு தொடங்க தகுதியானவர்களே. வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கி கணக்குகளை கொண்டு சேர்க்கவும், நிதி பரிமாற்றங்களில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரவும், மக்களிடையே வங்கி சேமிப்பு எண்ணத்தை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் பிரதானமாக இருக்கிறது.