ஓம் எனும் பிரணவ மந்திரம்! பிரபஞ்சத்தின் மூலாதார மந்திரத்தின் ஆன்மீகச் சிறப்பு!
உலகம் தோன்றுவதற்கு முன் பிரணவ மந்திரமே எங்கும் நிரம்பியிருந்ததாக கருதப்படுகிறது. ஓம்கார மந்திரம் ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமானைக் குறிப்பதாக நம்பிக்கை.
ஓம் எனும் மந்திரம் செய்யும் அற்புதங்கள்
'ஓம்' எனும் மந்திரம் நம்மை தியான நிலைக்குக் கொண்டு செல்கிறது. உடலையும் மனதையும் தளர்த்தி, ஆற்றலை சேமிக்க உதவுகிறது
எண்ண ஓட்டங்களையும், கவனச்சிதறல்களையும் சரிப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்தும் ஓம் எனும் மூலமந்திரம்
எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிகொண்டுவந்து நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் மந்திரம்
இந்து மதத்தில் மட்டுமல்ல, பௌத்தம், சமணம், சீக்கியம் மற்றும் பூர்வீக தெற்காசிய சமயங்களில் உள்ள ஒரு புனிதமான குறியீடு ஓம்
ஓம் என்பதற்கு ஆம் என்று அர்த்தம் என்று சொல்லப்படுகிறது. மந்திரங்களுக்கு எல்லாம் மூலாதாரமாக, முதன்மையானதாக, உயிராக இருப்பது ‘ஓம்
பிரணவ மந்திரத்தை உச்சரிக்கும்போது, ’ஓ’ வின் உச்சரிப்பு குறைவாகவும், ‘ம்’ இன் உச்சரிப்பு நீண்டாதகவும் இருக்க வேண்டும்.
ஓம், ஓம், ஓம்,… என்று தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். சப்தமாக உச்சரித்தாலும், மனதில் உச்சரித்தாலும் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது