கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தினமும் குடிக்கவேண்டியவை
தண்ணீர்: கர்ப்ப காலத்தில் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது மிகவும் அவசியம். இது உங்களது உடல் வறட்சி அடையாமல் இருக்க உதவுகிறது. மேலும் இது கர்ப்பமாக இருக்கும் போது உண்டாகும் வாந்தி, மயக்கம் போன்றவற்றை தடுக்க உதவுகிறது. அதனால் குறைந்தது ட்டு டம்ளர் தண்ணீர் பருக வேண்டியது அவசியம்.
எலுமிச்சை சாறு: கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு எலுமிச்சை சாறு முக்கியமாக பரிந்துரை செய்யப்படுகிறது. எலுமிச்சை சாறில் விட்டமின் சி அதிகமாக உள்ளது. இந்த எலுமிச்சை சாறு கர்ப்ப காலத்தில் காலை நேரத்தில் வரும் காய்ச்சலை போக்க உதவுகிறது.
இளநீர்: இளநீர் நீங்கள் கட்டாயம் அருந்த வேண்டிய ஒன்றாகும். இதில் பொட்டாசியம், குளோரைடுகள் மெக்னீசியம் ஆகியவை உள்ளன. மேலும் இது செரிமானமாக கூடிய நார்ச்சத்துகள், கால்சியம், மெக்கனீசு, விட்டமின் சி போன்றவற்றை கொண்டுள்ளது. இது உங்களது உடல் நீரில்லாமல் வறட்சியடைவதை தடுக்கிறது.
மோர்: மோர் கர்ப்பிணி பெண்களுக்கு மிகச்சிறந்த ஒரு நீர் ஆகாரமாகும். இது உங்களது கால்சியம் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது இரத்த அழுத்தம் அதிகரிப்பதை தவிர்க்க உதவுகிறது. முக்கியமாக வெயில் காலத்தின் கடுமையில் இருந்து விடுபட கர்பிணி பெண்கள் இந்த மோரை பருக வேண்டியது அவசியமாகும்.
ஆப்பிள் ஜூஸ்: ஆப்பிள் ஜூஸ் நல்ல சுவையானதும் ஆரோக்கியமானதும் ஆகும். ஆப்பிள் உங்களது உடலுக்கு நல்ல வலிமையை தருகிறது. இதனை குடிப்பதால் நீங்கள் களைப்பாக உணர மாட்டீர்கள்.