மிதுனத்திற்கு செல்லும் சூரியன்! ‘இந்த’ ராசிகளுக்கு பிரச்சனைகள் ஆரம்பம்!
சூரியன் பெயர்ச்சி: கிரகங்களின் ராஜாவான சூரியன் தொழில், வேலை மற்றும் கவுரவத்தின் காரணியாக கருதப்படுகிறது. இந்நிலையில், சூரியப் பெயர்ச்சி சில ராகளுக்கு பணபற்றாக்குறையையும், வேலையில் தொழிலில் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்த 6 ராசிகள் எவை என்று பார்ப்போம்.
மிதுன ராசியில் சூரியனின் சஞ்சாரம் காரணமாக ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சாதகமற்றதாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். வேலையில், தொழிலில் புதிய பிரச்சனைகள் வரலாம். உங்கள் பேச்சில் கவனம் தேவை. இதனால் உறவு பாதிக்கப்படும். இது குடும்ப உறவுகளிலும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் உங்கள் செலவுகள் பெருமளவில் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர் ஒருவரின் நோய்க்காக அதிக பணம் செலவிடப்படலாம். சொத்து வாங்குதல் மற்றும் விற்பதில் நஷ்டம் ஏற்படலாம். எனவே இந்த நேரத்தில் முக்கிய முடிவு எதையும் எடுக்க வேண்டாம்.
மிதுன ராசிக்கு வரும் சூரியன் இவர்களுக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்துவார். முக்கியமான வேலைகள் தடை பட்டு போகலாம். குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவும் பாதிக்கப்படலாம். சில பழைய விஷயங்களில் மனைவியுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்களின் பேச்சுத்திறன் நடத்தை உங்கள் அன்புக்குரியவர்கள் சிலரை உங்களிடமிருந்து விலக்கி வைக்கும். நீண்ட காலமாக வாட்டின் வந்த நோயும் தீவிரமடையலாம். உங்களது சக ஊழியர்களின் ஆதரவை உங்களால் பெற முடியாது. உங்கள் பணியிடத்தில் பதற்றமான சூழ்நிலை இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்தி எந்த விஷயத்திலும் பொறுமையாக செயல்படுங்கள்.
சூரியன் பெயர்ச்சியினால், துலாம் ராசிக்காரர்களின் குடும்பத்தில் திடீரென பிரச்சனைகள் அதிகரித்து, உறவு மோசமடையலாம். உங்கள் ஆரோக்கியத்தில் நிறைய பாதகமான விளைவுகள் ஏற்படலாம். பயணத்தில் நீங்கள் சில இழப்பை சந்திக்க நேரிடும். நீங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். முயற்சிக்கு ஏற்ற வெற்றி பெற மாட்டீர்கள். பயணத்தின் போது உங்கள் உடமைகளை கவனித்துக் கொள்ளுங்கள். வேலையாட்களை இடமாற்றம் செய்வதற்கான உத்தரவுகள் வரலாம். அது உங்கள் பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கலாம். குடும்பத்தில் உள்ள உடன்பிறந்தவர்களுடனான உறவுகள் பாதிக்கப்படலாம். எந்தவொரு விஷயத்திலும் வெற்றி பெற இந்த நேரத்தில் நீங்கள் அதிகமாக போராட வேண்டியிருக்கும்.
மிதுன ராசியில் சூரியனின் சஞ்சாரம் விருச்சிக ராசியினருக்கு சாதகமாக இல்லை. உங்கள் வாழ்க்கையில் பல வகையான பிரச்சனைகள் திடீரென அதிகரிக்கும். காரணமே இல்லாமல் பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ள நேரிடலாம். பணியிடத்தில் இந்த நேரத்தில், உங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துங்கள், எந்த காரணமும் இல்லாமல் மற்றவர்களுடன் பேச வேண்டாம். ஒருவருடன் வாக்குவாதம் அல்லது தகராறு காரணமாக, டென்ஷன் அதிகரித்து, வேலை செய்வதில் சிரமம் ஏற்படலாம். வருமானத்தைப் பெருக்க தவறான வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். இல்லையெனில், உங்கள் பிரச்சனைகள் அதிகமாகி, காரணமின்றி சிரமங்களில் சிக்கிக் கொள்ளலாம். உங்கள் குடும்பத்தில் எதிர்மறையான சூழல் நிலவும்.
மிதுன ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால், தனுசு ராசிக்காரர்கள் குடும்பத்தில் டென்ஷனைச் சந்திக்க நேரிடும், தன்முனைப்பால் வாழ்க்கைத் துணையுடன் மோதல்கள் அதிகரிக்கும். சூரியன் பெயர்ச்சி பாதிப்பு காரணமாக உங்கள் வாழ்க்கையில், வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். சில காரணங்களால் தொழிலில் நஷ்டம் ஏற்படலாம். நிதி பற்றாக்குறை ஏற்படலாம். இந்த நேரத்தில் நீங்கள் ஏதேனும் தவறான முடிவுகளால் சிக்கலில் இருக்கக்கூடும். பயணத்தின் போது உடமைகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
மீன ராசிக்காரர்கள் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் போது வாழ்க்கையில் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். நீங்கள் பல வகையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். ஒரு சொத்து வாங்கவதிலும் விற்பதிலும், சிக்கல் இருக்கலாம். ஏதேனும் வழக்கு நிலுவையில் இருந்தால் அதை தீர்த்துக்கொள்ளலாம். எனினும் நிதி ஃநெருக்கடி உங்களை வாட்டும். உங்கள் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் மற்றும் பதட்டங்கள் அதிகரிக்கலாம். இந்த நேரத்தில் நீங்கள் சில கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மன அழுத்தம் காரணமாக உங்களுக்கு தூக்கமின்மை அதிகரித்திருக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.