தொடர் தோல்வியில் பிரபாஸ்..! ப்ராஜெக்ட் கே படமாவது தோள் கொடுக்குமா..?

Fri, 21 Jul 2023-2:31 pm,

நடிகர் பிரபாஸ் தற்போது நடித்து வரும் படம், ப்ராஜெக்ட் கே. இந்த படத்தின் க்ளிம்ஸ் வீடியோ நேற்று வெளியானது. 

இந்த படத்திற்கு கல்கி 2898 ஏடி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

இதில் நடிகர் பசுபதி முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறார். 

தீபிகா படுகோனும் இந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தார். 

இந்த படத்தில் பிரபாஸ் கல்கி அவதாரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

கலியுக கடவுள் என போற்றப்படும் கல்கி, இருள் உலகை சூழும்போது அவதாரம் எடுப்பார் என கூறப்படுகிறது. அந்த கதாப்பாத்திரத்தில்தான் தற்போது பிரபாஸ் நடித்துள்ளார். 

பிரபாஸ் இதற்கு முன்னர் நடித்த ஆதி புருஷ் படம் படு தோல்வி அடைந்தது. இதிலும் அவர் விஷ்ணுவின் 7ஆவது அவதாரமான ராமனாக நடித்திருந்தார். 

இந்த படத்திலும் விஷ்ணுவின் அவதாரத்திலேயே நடித்துள்ளார். இதனால் படம் என்னாகுமோ என ரசிகர்கள் சற்று பீதியில் உள்ளனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link