குரு பெயர்ச்சி 2023: இந்த ராசிகளுக்கு பண வரவு! வேலை, வியாபாரத்தில் பம்பர் லாபம்!!

Mon, 23 Jan 2023-4:47 pm,

பொதுவாக அனைத்து கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் பல வித தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. வியாழனில் ஏற்படும் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஏப்ரல் 22, 2023 அன்று, குரு பகவான் தனது சொந்த ராசியான மீனத்தை விட்டு வெளியேறி, நட்பு ராசியான மேஷ ராசியில் நுழையவுள்ளார். குருவின் இந்த பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் 3 ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். 

மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். இந்த நபர்கள் வேலை தொடர்பான சில நல்ல தகவல்களைப் பெறலாம். பணி இடத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க் வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டம் அதிகரிக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.

மிதுன ராசிக்காரர்களுக்கு குருவின் ராசி மாற்றம் அதிகப்படியான நற்பலன்களை அள்ளித் தரும். பொருளாதார நிலையில் நல்ல ஏற்றம் ஏற்படலாம். பெரிய பதவிகளை நீங்கள் பெறக்கூடும். வேலை மாறுவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். 

சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அதிர்ஷ்டத்தைத் தரும். கடின உழைப்பின் முழு பலனையும் இந்த வேளையில் பெறுவீர்கள். செயல்களில் வெற்றி உண்டாகும். பெரிய சாதனைகளை இந்த காலத்தில் செய்வீர்கள். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link